பம்பையில் ரூ. 250 செலுத்தினால் இருமுடி கட்டுவதற்கு வசதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பம்பையில் ரூ. 250 செலுத்தினால் இருமுடி கட்டுவதற்கு வசதி

Added : நவ 20, 2021
Share
சபரிமலை:பம்பை தேவசம் கவுண்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றால் இருமுடி கட்டு கட்டி கொடுக்கப்படுகிறது. இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை கணபதி கோயிலில் தேவசம்போர்டு இந்த வசதியை செய்துள்ளது. இங்குள்ள கவுண்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு, பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி அல்லது அவரது உதவி பூஜாரிகள் கட்டு கட்டி கொடுத்து தலைமேல் ஏற்றி

சபரிமலை:பம்பை தேவசம் கவுண்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றால் இருமுடி கட்டு கட்டி கொடுக்கப்படுகிறது. இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை கணபதி கோயிலில் தேவசம்போர்டு இந்த வசதியை செய்துள்ளது.

இங்குள்ள கவுண்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு, பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி அல்லது அவரது உதவி பூஜாரிகள் கட்டு கட்டி கொடுத்து தலைமேல் ஏற்றி அனுப்புவார்கள். ஒரு இருமுடியில் ஒரு நெய் நிறைத்த தேங்காய், மஞ்சள், பொரி, அவல், சர்க்கரை, முந்திரி என 17 வகை பொருட்கள் இருக்கும். கூடுதல் நெய் தேங்காய் விரும்பும் பக்தர்கள் ஒரு தேங்காய்க்கு 80 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்.

இருமுடிக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லும் பக்தர்கள் 150 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதிகாலை 2:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X