சி.ஐ.ஐ.,யின் மருத்துவத்துறை ஸ்டார்ட் - அப் கருத்தரங்கு| Dinamalar

சி.ஐ.ஐ.,யின் மருத்துவத்துறை ஸ்டார்ட் - அப் கருத்தரங்கு

Added : நவ 20, 2021
Share
கோவை: கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) சார்பில், மருத்துவத்துறை ஸ்டார்ட் - அப் கருத்தரங்கு காணொளியில் நடந்தது.சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் அர்ஜுன் பிரகாஷ் பேசுகையில், ''சி.ஐ.ஐ., யின் வளர்ச்சி, முயற்சிகளின் ஒரு பகுதியாக, சி.ஐ.ஐ., ெஹல்த்கேர் ஸ்டார்ட் - அப் கனெக்ட், தி பியூச்சர் ஆப் ெஹல்த் உள்ளிட்ட பலரை இணைக்கும் முயற்சியை துவக்கியுள்ளது.வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு

கோவை: கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) சார்பில், மருத்துவத்துறை ஸ்டார்ட் - அப் கருத்தரங்கு காணொளியில் நடந்தது.சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் அர்ஜுன் பிரகாஷ் பேசுகையில், ''சி.ஐ.ஐ., யின் வளர்ச்சி, முயற்சிகளின் ஒரு பகுதியாக, சி.ஐ.ஐ., ெஹல்த்கேர் ஸ்டார்ட் - அப் கனெக்ட், தி பியூச்சர் ஆப் ெஹல்த் உள்ளிட்ட பலரை இணைக்கும் முயற்சியை துவக்கியுள்ளது.வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில், இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக சுகாதாரத்துறை மாறியுள்ளது. ஹெல்த்கேர் என்பது, மருத்துவமனைகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவ பரிசோதனைகள், அவுட்சோர்சிங், டெலிமெடிசின், மருத்துவ சுற்றுலா, சுகாதார காப்பீடு மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கியது,'' என்றார்.கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாதி ரோஹித், கோவை சி.ஐ.ஐ., ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன், காவேரி மருத்துவமனை தலைவர் சந்திரகுமார், சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழில்துறையினர், மருத்துவத்துறையினர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X