பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வெளியேற்றம்: போக்குவரத்து மாற்றம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை : மழை நீர் வெளியேற்றம் காரணமாக, தி.நகர். கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தி.நகர், பசுல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றுகின்றனர். இதன் காரணமாக, ஜி.என்.செட்டி சாலை - வாணி மஹால் சிக்னலில் இருந்து, பசுல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ஜி.என்.செட்டி சாலை, அபிபுல்லா சாலை வழியாக திருப்பி

சென்னை : மழை நீர் வெளியேற்றம் காரணமாக, தி.நகர். கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தி.நகர், பசுல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றுகின்றனர். இதன் காரணமாக, ஜி.என்.செட்டி சாலை - வாணி மஹால் சிக்னலில் இருந்து, பசுல்லா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், ஜி.என்.செட்டி சாலை, அபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன.

கே.கே.நகர் அரசு மருத்துவமனை எதிரே, அண்ணா பிரதான சாலையில், வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக, உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல, உதயம் சிக்னலில் இருந்து, அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும், அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி, 4வது அவென்யூவில், மெட்ரோ கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதனால், திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் , மூன்றாவது அவென்யூவில் இருந்து, இரண்டாவது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.மேற்கண்ட பணிகள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X