கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன்கூட்டி விடுதலையை ரத்து செய்ய வழக்கு உள்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் 'கெடு'

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட இருவர் நிபந்தனைகளை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலர் நவம்பர் 23க்குள் முடிவெடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த பி.பி.சாவடி இளவரசி தாக்கல் செய்த மனு:உசிலம்பட்டியை சேர்ந்த உமாசங்கர்,

மதுரை:ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட இருவர் நிபந்தனைகளை மீறி தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக உள்துறை செயலர் நவம்பர் 23க்குள் முடிவெடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த பி.பி.சாவடி இளவரசி தாக்கல் செய்த மனு:உசிலம்பட்டியை சேர்ந்த உமாசங்கர், அன்னம்பாறைப்பட்டியை சேர்ந்த சாய்பிரசாத் ஆகியோர், வழக்கறிஞர் குமரகுருவை 2005ல் கொலை செய்த வழக்கில்ஆயுள் தண்டனை அனுபவித்தனர். தமிழக அரசு 2018ல் பிறப்பித்த அரசாணை அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இருவரும் என் கணவர் நாகுவை 2020 நவ., 20ல் கொலை செய்தனர்.

ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இருவர் மீதும், விக்கிரமங்கலம் போலீசில் ஒரு கொலை வழக்கு, செக்கானுாரணி போலீசில் வேறொரு கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பின், நிபந்தனைகளை மீறியுள்ளனர்.உமாசங்கர், சாய்பிரசாத்தை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு:இருவரின் நடத்தையை கவனத்தில் கொண்ட பின், முன்கூட்டியே விடுதலை செய்ததை ரத்து செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு, தமிழக உள்துறை முதன்மைச் செயலருக்கு சிறை துறை டி.ஜி.பி., பரிந்துரைத்து உள்ளார். அதில் ஆறு மாதங்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்காததால், உள்துறை முதன்மைச் செயலர் மீது இந்நீதிமன்றம் அதிருப்தி அடைகிறது.

உமாசங்கர், சாய்பிரசாத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்களால் ஆபத்து வரலாம் என மனுதாரர் தரப்பு கூறுகிறது.நவம்பர் 23 அல்லது அதற்கு முன் உரிய உத்தரவை, உள்துறை முதன்மைச் செயலர் பிறப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அவர் நவம்பர் 24ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X