பிடிக்க முடியாத பி.டி.ஓ., உத்திரமேரூர் மக்கள் புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : மழை பாதிப்பு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, உத்திரமேரூர் வட்டார ஊராட்சி பொறுப்பு வகிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலரை மொபைல் போனில் தொடர்பு கொண்டால், அவர் மொபைல் அழைப்பை ஏற்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் 130 ஏரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரிகள் 100 சதவீதம்

உத்திரமேரூர் : மழை பாதிப்பு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, உத்திரமேரூர் வட்டார ஊராட்சி பொறுப்பு வகிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலரை மொபைல் போனில் தொடர்பு கொண்டால், அவர் மொபைல் அழைப்பை ஏற்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் 130 ஏரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.தாழ்வான பகுதியில் வசிப்போர், நிவாரண முகாமில் தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் ஏற்படும் பாதிப்பு குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, உத்திரமேரூர் வட்டார ஊராட்சி பொறுப்பு வகிக்கும், வட்டார வளர்ச்சி அலுவலரான தங்கராஜை, அரசு வழங்கியுள்ள 74026 06028 என்ற, சி.யூ.ஜி., மொபைல் எண்ணில் தொடர்பு கொள்கின்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல், தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X