பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து இறந்த பசுக்களுக்கு வாரியம் இழப்பீடு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை : மின்சாரம் பாய்ந்து இறந்த ஐந்து பசுக்களுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நபர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், கால்நடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் மின் வாரியம் இழப்பீடாக வழங்குகிறது.சென்னை மேடவாக்கத்தில், மின் கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்ததில், சாலையில் சென்ற

சென்னை : மின்சாரம் பாய்ந்து இறந்த ஐந்து பசுக்களுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நபர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், கால்நடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் மின் வாரியம் இழப்பீடாக வழங்குகிறது.சென்னை மேடவாக்கத்தில், மின் கம்பி அறுந்து தண்ணீரில் விழுந்ததில், சாலையில் சென்ற ஐந்து பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.

இதனால், பசுக்களின் உரிமையாளருக்கு, பசுவுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஒருவர் கூறியதாவது:விபத்து நடந்த சாலையில், மின் கம்பத்திற்கு அருகில் மேலே சென்ற கேபிள் 'டிவி' ஒயர்கள், ஒரு இடத்தில் அதிக சுருள்களாக படர்ந்திருந்தன.

அதிக எடை உடன் இருந்த அந்த ஒயர்கள், பலத்த காற்று வீசியதில் மின் கம்பியின் மீது பட்டு, கம்பி அறுந்து விழுந்தது.இனி மின் விபத்து ஏற்படாமல் இருக்க, மின் வினியோக சாதனங்களை சரிபார்ப்பதுடன், அவற்றின் அருகில் உள்ள இடங்களின் சூழலையும் சரிபார்த்து, ஏதேனும் பாதிப்பு இருந்தால் சரிசெய்யுமாறு, பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X