சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி வரைபடம் தயாரித்து மோசடி: வரன்முறை உத்தரவு ரத்து

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு போலி வரைபடம் தயாரித்து, அனுமதியற்ற லே-அவுட் என, வரன்முறை செய்ததை, மூன்று ஆண்டுகளுக்கு பின், நகர ஊரமைப்புத்துறையினர் கண்டுபிடித்து, ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்தனர்.கோவை மாநகராட்சியுடன் விளாங்குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது. 1990ல், 3.50 ஏக்கர் பரப்புக்கு ஸ்ரீராமகிருஷ்ணா


கோவை:கோவையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு போலி வரைபடம் தயாரித்து, அனுமதியற்ற லே-அவுட் என, வரன்முறை செய்ததை, மூன்று ஆண்டுகளுக்கு பின், நகர ஊரமைப்புத்துறையினர் கண்டுபிடித்து, ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்தனர்.
கோவை மாநகராட்சியுடன் விளாங்குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது. 1990ல், 3.50 ஏக்கர் பரப்புக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கப்பட்டு, 34 மனைகளாக பிரித்து, உள்ளூர் திட்ட குழுமத்திடம் வரைபட அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அதன்படி 33 மனைகள் பிரிக்கப்பட்டன. 15 ஆயிரத்து, 840 சதுரடிக்கு பூங்கா இடம், 1,440 சதுரடிக்கு பக்க திறவிடம் ஒதுக்கப்பட்டது.லே-அவுட் உருவாக்கியவர்கள், வரைபடத்தில் குறிப்பிட்டிருப்பதை போல், 39 சென்ட் இடத்தை, உள்ளாட்சி அமைப்புக்கு தானப்பத்திரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 28 ஆண்டுகள் கழித்து, 2018ல் பூங்கா மற்றும் பக்க திறவிடத்துக்கு ஒதுக்கிய நிலங்களையும், அருகாமையில் உள்ள இடத்தையும் சேர்த்து போலியாக வரைபடம் தயாரித்திருக்கின்றனர்.அதை, அங்கீகாரமற்ற மனைப்பிரிவாக காண்பித்து, உள்ளூர் திட்ட குழுமத்தில் வரன்முறை செய்திருக்கின்றனர். அதன்பின், 8 மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.நகரமைப்பு பிரிவினர் சென்று, அப்பகுதியை ஆய்வு செய்து, 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என பலகை வைத்தனர்.இதுதொடர்பான ஆவணங்கள், நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டன. மூன்றாண்டுகளுக்கு பின், உண்மையை புரிந்து கொண்டனர். அத்துறை இணை இயக்குனர் வாழவந்தான் ஆவணங்களை சரிபார்த்து, அனுமதியற்ற லே-அவுட்டுக்கு ஏற்கனவே வழங்கியிருந்த அனுமதியை, மூன்றாண்டுக்கு பின், ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அவர், மாநகராட்சி கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நகர ஊரமைப்புத்துறையில் அனுமதி பெற்ற வரைபடத்தில் ஒதுக்கியிருந்த ரிசர்வ் சைட், பக்கத்திறவிடம் மற்றும் சாலை பகுதியை இணைத்து போலியாக வரைபடம் தயாரித்து, அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறை கோரி, நாராயணசாமி என்பவரால் விண்ணப்பிக்கப்பட்டது. இது, சட்டத்துக்கு புறம்பானது.பூங்கா மற்றும் திறவிடத்தை மாற்றம் செய்யக் கூடாது.
அவ்விடத்தை அதன் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தானமாக ஒப்படைக்க வேண்டும்,விளாங்குறிச்சி கிராமத்தில், 2018ல், வரன்முறை எண்: 204ல், 1.90 ஏக்கர் (82 ஆயிரத்து, 764 சதுரடி) பரப்பு கொண்ட மனையிடத்தில், அனுமதியற்ற மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கி, வரன்முறை செய்யப்பட்டு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதனால், அனுமதியற்ற மனைப்பிரிவின் வரன்முறையை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.உத்தரவு நகல், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், வடக்கு தாசில்தார் மற்றும் காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை, இத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, ரத்து செய்ய வேண்டும்.அவ்விடங்களை மீட்டு, கமிஷனர் பெயருக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 6 கோடி ரூபாய் இருக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X