கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அரிசோனா :சீனாவில் ஒரு மீனவப் பெண்தான் கொரோனா வைரசின் முதல் தாக்குதலுக்கு ஆளானவர் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் 2019 இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலக நாடுகளை பதம் பார்த்தது. இது குறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலையின் சுற்றுச்சூழல் துறை தலைவர் மைக்கேல் வோரோபே தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை
கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்டது யார்

அரிசோனா :சீனாவில் ஒரு மீனவப் பெண்தான் கொரோனா வைரசின் முதல் தாக்குதலுக்கு ஆளானவர் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில் 2019 இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலக நாடுகளை பதம் பார்த்தது. இது குறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலையின் சுற்றுச்சூழல் துறை தலைவர் மைக்கேல் வோரோபே தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news



கடந்த 2019 டிச. 8ல் சீனாவின் வூபே மாகாணம் வூஹான் சந்தையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் வசித்த கணக்காளர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் வூஹான் பிராணிகள் சந்தையைச் சேர்ந்த பலருக்கு காய்ச்சல் தலைவலி போன்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள் உண்டாயின. அதனால் கணக்காளர் தான் கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டது.

உண்மையில் அவருக்கு பல் சிகிச்சையின் பக்க விளைவால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்டவர் ஒரு மீனவப் பெண்.
அவர் வூஹான் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு டிச. 8ல் காய்ச்சல்
தலைவலி உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் கொரோனாவால் முதன் முதலாக பாதிக்கப்பட்டவர் அந்த மீனவப் பெண்தான்.

கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து கசிந்ததாகவும் உயிருள்ள பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. வவ்வால்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த வவ்வால்கள் வூஹான் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.

அவற்றை சாப்பிட்டதன் வாயிலாக மனிதர்களுக்கு வைரஸ் பரவியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுபோல இச்சந்தையில் விற்கப்பட்ட ராகூன் நாய்களாலும் கொரோனா பரவியிருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RUPA - KOLKATA,இந்தியா
20-நவ-202110:55:58 IST Report Abuse
RUPA அங்கேயும் ஜாதி பிரச்னை, என்ன உலகமடா சாமீ.
Rate this:
Cancel
RUPA - KOLKATA,இந்தியா
20-நவ-202110:55:05 IST Report Abuse
RUPA ITH
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-நவ-202101:20:50 IST Report Abuse
Natarajan Ramanathan உலகில் எப்படி / யார் மூலம் பரவி இருந்தாலும் இந்தியாவில் பரப்பியது தப்லீக் ஜமாத் கும்பல்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X