மாமல்லபுரம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, வார்டு வரையறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தது. அக்., 22ம் தேதி, மறைமுக பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த, தமிழக தேர்தல் ஆணையம் தயாராகிறது.
இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வார்டுகள் வரையறை குறித்து, நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.கடந்த 2016 உள்ளாட்சி தேர்தல் ஏற்பாட்டின்போது, ஒவ்வொரு உள்ளாட்சிப் பகுதியிலும், முந்தைய தேர்தல்களின் வார்டுகள் எண்ணிக்கையே வரையறுக்கப்பட்டன.வாக்காளர்கள் அதிகரித்து, எண்ணிக்கை அடிப்படையில், ஒரே வார்டு பகுதி இரண்டாக பிரிப்பு, வார்டு வரிசை எண்கள் மாற்றம் என, மாற்றமடைந்தது.
இத்தகைய வரையறை வார்டுகளே, தற்போதைய தேர்தலிலும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள், இவ்விபரம் அறிய, உள்ளாட்சி நிர்வாக, பிற அரசு அலுவலகங்களில், நிர்வாக அறிவிப்பாணை வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE