சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட வீடு

Added : நவ 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வேலுார்:பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால், குடியாத்தம் அருகே வழக்கறிஞர் ஒருவர் வீடு அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பசுமாத்துார் பாலாற்றின் கரையோரம் உள்ள பாலாற்று நகரில், 50க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வக்கீல் இளங்கோ என்பவர், சில மாதங்களுக்கு முன் இங்கு இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி
 பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட வீடு

வேலுார்:பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால், குடியாத்தம் அருகே வழக்கறிஞர் ஒருவர் வீடு அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே பசுமாத்துார் பாலாற்றின் கரையோரம் உள்ள பாலாற்று நகரில், 50க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வக்கீல் இளங்கோ என்பவர், சில மாதங்களுக்கு முன் இங்கு இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி குடியேறினார்.வேலுார் மாவட்டத்தில், சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 1 லட்சம் கன அடிக்கு மேல் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

பாலாற்றின் கரையோரம் உள்ள இளங்கோவின் வீட்டுக்கு அருகில், மதியம், 3:00 மணிக்கு வெள்ளம் வந்தது. வீட்டிலிருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறினர். திடீரென பாலாற்று வெள்ளத்தில் அந்த வீடு ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப் பட்டது. வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.
வீடு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அப்பகுதி மக்களும், வக்கீல் குடும்பத்தினரும் பரிதாபமாக பார்த்தனர். 70 மாடுகள் பலிகர்நாடக மாநிலம், பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டதால், திருப்பத்துார், ஆம்பூர், வேலுார் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வேலுார் அருகே சேண்பாக்கம் பாலாற்றில், ஏராளமான மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

பாலாற்றில் வெள்ளம் அதிகரித்ததால், தீயணைப்பு துறையினால் மாடுகளை காப்பாற்ற இயலவில்லை. இதுவரை, 70 மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.


கேரளாவுக்கு நீர் குறைப்புகேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. 18ம் தேதி நீர்மட்டம், 141 அடியை எட்டியது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பதிவாகவில்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து 3,348 கன அடியில் இருந்து 2,790 கன அடியாக குறைந்தது.

நீர்மட்டம் குறைந்து 140.80 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து, நீர்மட்டம் குறைவதால், கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நான்கு ஷட்டர்களில், மூன்று ஷட்டர்கள் அடைத்து, ஒரு ஷட்டர் மூலம் 128 கன அடி வெளியேற்றப்படுகிறது. இதற்கு முன் 1,544 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202119:25:41 IST Report Abuse
Bhaskaran ஆக்கிரமிப்புக்கு பலன்
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
22-நவ-202117:12:39 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இனி புரிந்து கொள்ள வேண்டியது 1900 மேப் படி பொது இடத்தை அக்கிரமித்தவர்கள் வெளி ஏறுவது நல்லது. மதுரை கோர்ட் புதிதாக கட்டிய திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் எல்லாம். அரசியல் வாதிகள் அதிகாரிகள் நல்லதை செய்யுங்கள். கலெக்டர் ஆபீஸ் 25 ஏக்கர் வேண்டும் என்றால் கவலை படாதீர்கள் நகரை தாண்டி 50 ஏக்கர் காலி இடம் தேர்வு செய்யுங்கள் பாதியை எடுத்துக்கொண்டு பாதியை அனைவருக்கும் பாதி பாதி கொடுங்கள் அனைவரும் வாழமுடியும். ஏன் முன்னோர்கள் ஒதுக்கிய குழியை கட்டிடங்களுக்கு பயன்படுத்துகிறீர்கள். உங்கள் எடுகேஷன் எந்த அளவு உள்ளது பணத்தை சேர்க்கும் போது எதுவும் தெரிவது இல்லை. சேர்த்த பணம் வாரிசுக்கு போதாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Rate this:
selva - Chennai,இந்தியா
23-நவ-202112:41:27 IST Report Abuse
selva//சேர்த்த பணம் வாரிசுக்கு போதாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்// உண்மை.....
Rate this:
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
20-நவ-202112:30:38 IST Report Abuse
Vijaya Raghav நீர் நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டக்கூடாது என்பது இந்த மேதாவி வக்கீலுக்கு தெரியாதா ஒரு வேலை ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருக்கும். புடிங்கிகிட்டு விட்டது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
20-நவ-202115:46:43 IST Report Abuse
 Muruga Velஆதம்பாக்கம் கக்கன் பிரிட்ஜ் தண்ணீர் வரும் பாதையை பாருங்கள் ...வீடுகள் கட்டி வசிக்கிறார்கள் ..நூறு மீட்டர் முன்னாலே இருக்கும் ஆதம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனுக்குள்ளே மழை தண்ணீர் ... பக்கெட்டில் எடுத்து சாலையில் விடுகிறார்கள் .....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்சிலமாதங்களுக்கு முன் ஆண்ட கட்சியா இல்லை இப்போதுதான் ஆட்சியை பிடித்த கட்சியான்னு தெளிவா சொல்லி திட்டுங்க யாரோ பாதிக்கப் பட்டதற்கு இத்தனை பதறணுமா? எல்லாம் ஈசனின் செயலென்று இருப்போம் நேரில் கண்ட காட்சி ஒன்று நல்ல பாம்பு ஒன்று வானில் கழுகிடம் தப்பி நடு ரோட்டில் பட்டப்பகலில் சைக்கிளில் போனவன்மேல் விழுந்து பலமுறை கொத்திவிட்டு மறைந்து விட்டது ஆள் ஸ்பாட்ல காலி அவன் ஆளாத கட்சியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X