ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தை

Added : நவ 20, 2021
Share
ராஜபாளையம்:சென்னையைச் சேர்ந்த யோகேஷ்- - யாழினி தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆண்டாள் மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜாராம் கூறியதாவது: யாழினி கருவுற்ற உடனே சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 'மூன்று கரு உருவாகி உள்ளதால், குழந்தைகளை பெற்றெடுக்க இயலாது; கருவை கலைத்து விடுங்கள்' என கூறி
 ஒரே பிரசவத்தில்  3 ஆண் குழந்தை

ராஜபாளையம்:சென்னையைச் சேர்ந்த யோகேஷ்- - யாழினி தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆண்டாள் மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜாராம் கூறியதாவது: யாழினி கருவுற்ற உடனே சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 'மூன்று கரு உருவாகி உள்ளதால், குழந்தைகளை பெற்றெடுக்க இயலாது; கருவை கலைத்து விடுங்கள்' என கூறி உள்ளனர்.

கடந்த 2017ல் இங்கு நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்ததை அறிந்த தம்பதி, எட்டு மாதங்களாக தங்கி ஆலோசனை மேற்கொண்டனர்.நேற்று ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை, அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளோம், தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X