சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ப்ரீ பயர் கேம்' விளையாட தடை; 213 சவரனுடன் சிறுவன் ஓட்டம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டையில், 'ஆன்லைன் ப்ரீ பயர் கேம்' விளையாட பெற்றோர் தடை விதித்ததால், வீட்டில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம் மற்றும்213 சவரன் தங்க நகையுடன், நேபாளத்திற்கு தப்பிக்க முயன்ற 15 வயது சிறுவனை, போலீசார் பிடித்தனர்.வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார், 45; குடிநீர் வாரிய லாரி ஒப்பந்ததாரர்.பத்தாம் வகுப்பு படிக்கும், ௧௫

வண்ணாரப்பேட்டை : வண்ணாரப்பேட்டையில், 'ஆன்லைன் ப்ரீ பயர் கேம்' விளையாட பெற்றோர் தடை விதித்ததால், வீட்டில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம் மற்றும்213 சவரன் தங்க நகையுடன், நேபாளத்திற்கு தப்பிக்க முயன்ற 15 வயது சிறுவனை, போலீசார் பிடித்தனர்.

வண்ணாரப்பேட்டை, மொட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார், 45; குடிநீர் வாரிய லாரி ஒப்பந்ததாரர்.பத்தாம் வகுப்பு படிக்கும், ௧௫ வயதுள்ள இவரது இரண்டாவது மகன், வீட்டில் எந்நேரமும் மொபைல் போனில், 'ஆன்லைன் ப்ரீ பயர் கேம்' விளையாடி உள்ளான். இதை கவனித்த பெற்றோர், அவனை கண்டித்து, கேம் விளையாட தடை விதித்துள்ளனர்.

இதனால் தவித்து போன சிறுவன், வீட்டில் இருந்த 33 லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் நகையுடன், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினான்.மகனை காணவில்லை என தேடிய பெற்றோர், பணம், நகையும் காணாமல் போனதால், வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து சிறுவனை தேடினர். இந்நிலையில், சிறுவன் தான் கொண்டு சென்ற பணத்தில் புதிதாக 'ஐ போன்' வாங்கி, அதில் 'சிம் கார்டு' போட்டு பேசியுள்ளான். இதை வைத்து, நேற்று போலீசார் சிறுவனை பிடித்தனர்.

விசாரணையில், 'பிரீ பயர் கேம்' மூலம் மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மற்றும் நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டு பகுதிகளில் நண்பர்கள் பழக்கமானதும், அவர்களிடம் பேசி நேபாளம் செல்ல இருந்ததும் தெரிந்தது.சிறுவனிடமிருந்து நகை, பணத்தை மீட்ட போலீசார், பெற்றோரை வரவழைத்து அவற்றை ஒப்படைத்து, சிறுவனையும் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X