பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி திட்டம்: மேலும் 3 கலை குழுக்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், ஏற்கனவே மூன்று கலைக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மேலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு, மூன்று நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சி, காஞ்சிபுரத்தில் நேற்று துவங்கியது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், ஏற்கனவே மூன்று கலைக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மேலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு, மூன்று நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சி, காஞ்சிபுரத்தில் நேற்று துவங்கியது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பயிற்சி குறித்து கல்வித்துறையினர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தன்னார்வலர் பதிவு எந்த பகுதியில் குறைவாக உள்ளதோ அந்த பகுதியில், கலைக்குழு கவனம் செலுத்த உள்ளனர்.நாடகம், பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக, விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.ஒரு நாளைக்கு நான்கு இடங்களுக்கு செல்வர். காலையில் இரண்டு பள்ளிகளுக்கும், மாலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவர்.தன்னார்வலர்கள் பதிவு செய்ய, படிவம் கொடுத்து கலைக்குழுவினர் பெற்று வருவர். ஆன்லைனில் பதிவு செய்ய வலியுறுத்துவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X