மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்:கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கைது

Added : நவ 20, 2021
Advertisement
கோவை:மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். கோவை அரசு கலைக் கல்லுாரியில் பயிலும் 19 வயது மாணவி, ரேஸ்கோர்ஸ் போலீசில், பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தார். இதையடுத்து, பேராசிரியர் ரகுநாதன், 42 என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து, போலீசார் கூறியதாவது:அந்த மாணவிக்கு
 மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்:கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கைது

கோவை:மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், கோவை அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
கோவை அரசு கலைக் கல்லுாரியில் பயிலும் 19 வயது மாணவி, ரேஸ்கோர்ஸ் போலீசில், பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தார். இதையடுத்து, பேராசிரியர் ரகுநாதன், 42 என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:அந்த மாணவிக்கு கடந்தாண்டு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கல்லுாரிக்கு சென்ற மாணவி சரியாக படிக்கவில்லை.
எனவே, அந்த மாணவியை, ஆசிரியர்கள் அறைக்கு வருமாறு துறை தலைவர் ரகுநாதன் அழைத்துள்ளார். அந்த மாணவியின் நிலை குறித்து கேட்டுள்ளார்.இதை தனக்கு சாதகமாக்கிய ரகுநாதன், மாணவியின் சொந்த ஊருக்கு 'நோட்ஸ்' கொடுப்பது போல் சென்றுள்ளார். அங்கு மாணவியை காரினுள் இழுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டிஉள்ளார்.இவ்வாறு, போலீசார் கூறினர். பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேராசிரியர் ரகுநாதனுக்கு 2019ல் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால், ஓராண்டாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X