சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்தவர் கைது

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமினை 51, ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ரெட்டிக்குப்பம் கானாத்துாரை சேர்ந்தவர் ஏழுமலை பெஞ்சமின் 51. மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவருடன் ராமநாதபுரம் வெளிப்பட்டணம் காளிகாதேவி கோவில்

ராமநாதபுரம்:அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்த செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமினை 51, ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ரெட்டிக்குப்பம் கானாத்துாரை சேர்ந்தவர் ஏழுமலை பெஞ்சமின் 51. மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். இவருடன் ராமநாதபுரம் வெளிப்பட்டணம் காளிகாதேவி கோவில் தெரு விக்னேஷ்ராஜா 32, என்பவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் ராஜாவிடம் பெஞ்சமின் தனக்கு அரசுத்துறைகளில் அதிகாரிகள் பழக்கம் உள்ளதால் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய விக்னேஷ்ராஜா தனது அக்கா உட்பட உறவினர்களுக்கு வேலைக்காக பணம் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், டிரைவர், இளநிலை உதவியாளர், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு 22 பேரிடம் ரூ.60 லட்சம் வரை பெற்றுள்ளார்.பின் அதில் சிலருக்கு சில நாட்களுக்கு முன் போலியாக வேலைக்கான ஆணையை கொடுத்தார்.
மீதமுள்ளவர்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கே வரவழைத்து ராமநாதபுரம் கலெக்டர் பெயரில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கையெழுத்திட்ட போலி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.தகவலறிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், எம்.ஏ., எம்.எட்., படித்துள்ள ஏழுமலை செங்கல்பட்டில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, அதன் பின் ரியல் எஸ்டேட் தொழில் செய்ததோடு, இதுபோல் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போல் பலரிடம் பல லட்சம் மோசடி செய்து கைது செய்யப் பட்டுள்ளார். தற்போது தென்காசியில் ஒருவரை ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்துள்ளதால், இன்னும் விசாரணை நடத்தினால் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருக்கலாம், என டி.எஸ்.பி., திருமலை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X