பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
காவலாளிக்கு 'போக்சோ'மயிலாப்பூர்: மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, 9 வயது சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், வீட்டின் அருகே விளையாடிய தன் மகளை, கீழ் தளத்தில் வசிக்கும் காவலாளி பாபு, 56, என்பவர் சில்மிஷம் செய்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர். பாபுவிடம் விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

காவலாளிக்கு 'போக்சோ'

மயிலாப்பூர்: மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, 9 வயது சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றை அளித்தனர்.

அதில், வீட்டின் அருகே விளையாடிய தன் மகளை, கீழ் தளத்தில் வசிக்கும் காவலாளி பாபு, 56, என்பவர் சில்மிஷம் செய்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.

பாபுவிடம் விசாரித்ததில், குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால், 'போக்சோ' சட்டத்தில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

பெண்ணை ஏமாற்றியவர் கைது

வண்ணாரப்பேட்டை: கொருக்குப்பேட்டை, ரங்கநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தீபன் சக்ரவர்த்தி, 31, மாதவரத்தைச் சேர்ந்த, 28 வயது பெண்ணை, ஏழாண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அப்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் திருமணத்திற்கு வற்புறுத்திய போது, தீபன் சக்கரவர்த்தி மறுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்பெண் அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று தீபன் சக்ரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பெண் அதிகாரி அலுவலகத்தில் 'ரெய்டு'சைதாப்பேட்டை: சென்னை, சைதாப்பேட்டையில், தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது.

அங்கு, ஏ.ஐ.ஜி.,யாக மீனாகுமாரி பணிபுரிகிறார். இவரது அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது, கணக்கில் வராத லஞ்ச பணம், 3.96 லட்சம் ரூபாய் சிக்கியது. இது தொடர்பாக, மீனாகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X