மதுரை:மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிவிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அதற்கு ஹிந்தியில் தான் பெயர் வைக்கின்றனர். அதை தமிழகத்தில் அமல்படுத்தும்போது, அப்படியே தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது.
உதாரணமாக, 'பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி, பிரதான் மந்திரி கிஷான் பென்ஷன் யோஜனா' என அறிவிப்பு செய்வதால், அதன் பொருளடக்கம் மக்களுக்கு புரியவில்லை. எல்.ஐ.சி., நிறுவனம் பாலிசிகளை ஹிந்தி பெயர்களில் வெளியிடுகிறது. மத்திய அரசு துறைகளின் திட்டங்களை, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் மொழிபெயர்த்து அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு, நவம்பர் 22க்கு ஒத்தி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE