காசிமேடு : சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படும் படகுகளில் இருந்து ஜி.பி.எஸ்., கருவி, டீசல், வலைகள் திருடு போவதாக தொடர் புகார் வந்தது.
இந்நிலையில், சுதர்சனம், 47, என்பவரின் விசைப்படகில் ஜி.பி.எஸ்., கருவி, ஒயர்லெஸ் கருவி திருடு போனதாக, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.அத்துடன், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், படகுகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை மீனவர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காசிமேடு, சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த சுதாகர், 28, என்பதும், ஜி.பி.எஸ்., கருவிகளை திருடியதும் தெரிந்தது. இவர் அளித்த தகவலின்படி, காசிமேடைச் சேர்ந்த அண்ணாதுரை, 55; செந்தில், 53, ஆகியோரை போலீசார் கைது செய்து, ஜி.பி.எஸ்., மற்றும் வி.எச்.எப்., வயர்லெஸ் கருவியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE