மணமான 4 மாதத்தில் வாலிபர் தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணமான 4 மாதத்தில் வாலிபர் தற்கொலை

Added : நவ 20, 2021
Share
மாங்காடு : மாங்காடில், திருமணமான நான்கு மாதத்தில், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 24. இவர் நான்கு மாதங்களுக்கு முன் கவுசல்யா, 20, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம், வீட்டு அறையில் துாக்கில் தொங்கிய

மாங்காடு : மாங்காடில், திருமணமான நான்கு மாதத்தில், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 24. இவர் நான்கு மாதங்களுக்கு முன் கவுசல்யா, 20, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம், வீட்டு அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், தியாகராஜன் இறந்தது தெரியவந்தது.விசாரணையில், அக்., மாதம், அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை தாக்கியதால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த தியாகராஜன், சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

மற்றொரு புறம் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தியாகராஜனும், அவரது உறவினரும் எதிரெதிரே வேட்பாளர்களுக்கு வேலை செய்ததால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதனால், அந்த உறவினர் தியாகராஜனை பார்க்கும் போதெல்லாம் முறைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால், தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் போலீசில் புகார் அளிக்க வந்தனர்.

அவர்களிடம் பேச்சு நடத்திய போலீசார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, கலைந்தனர். இச்சம்பவம் குறித்து, மாங்காடு போலீசார் வழக்கு பதிந்து, தியாகராஜன் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X