சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகளை கிணற்றில் வீசி ஆடு வியாபாரி தற்கொலை

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:தொழில் நஷ்டத்தால் இரு மகள்களை கிணற்றில் வீசி கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, காசிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 29; மனைவி காயத்ரி, 28. தேஜஸ்வி, 4; சுவஸ்வி, 2 என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.பஸ் கண்டக்டர்தனியார் பஸ் கண்டக்டராக, ஜெகன் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் பஸ்கள் இயங்காத நேரத்தில், ஆடுகள் வாங்கி விற்று வந்தார்.
 2 குழந்தைகளை கிணற்றில் வீசி ஆடு வியாபாரி தற்கொலை

திருப்பூர்:தொழில் நஷ்டத்தால் இரு மகள்களை கிணற்றில் வீசி கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, காசிபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 29; மனைவி காயத்ரி, 28. தேஜஸ்வி, 4; சுவஸ்வி, 2 என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.பஸ் கண்டக்டர்தனியார் பஸ் கண்டக்டராக, ஜெகன் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் பஸ்கள் இயங்காத நேரத்தில், ஆடுகள் வாங்கி விற்று வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டு, சிலருக்கு பணம் தர வேண்டியிருந்தது.

இந்நிலையில் 16ம் தேதி, காசிபாளையத்தில் இருந்து, அருகேயுள்ள எல்லமேட்டில் உள்ள மாமியார் வீட்டுக்கு, குடும்பத்தினருடன் ஜெகன் சென்றார். நேற்று முன்தினம் காசிபாளையம் கிளம்பலாம் என ஜெகன் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லை எனக் கூறி, காயத்ரி வரவில்லை. ஜெகன், இரு மகள்களுடன் பைக்கில், திருப்பூர் மாவட்டம், துத்திக்குளம் கிராமத்தில் உள்ள தன் தந்தை வீட்டுக்கு வந்தார்.
அங்கு தந்தை மற்றும் வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். சடலங்கள் மீட்புஅன்று மாலை ஜெகன், அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் இரு மகள்களை தள்ளி கொன்று, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மூவரின் சடலங்களையும் நேற்று அதிகாலை வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X