பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் குறைகிறது நீர்மட்டம்: கேரள பகுதிக்கு நீர் வெளியேற்றம் குறைப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
கூடலூர்:நீர் பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் 140.80 அடியாக குறைந்தது. கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்படும் நீர் 128 கனஅடியாக குறைக்கப்பட்டது.மூன்று வாரத்திற்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் நவ.18 ல் 141 அடியை எட்டியது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு

கூடலூர்:நீர் பிடிப்பில் மழையின்றி பெரியாறு அணை நீர்மட்டம் 140.80 அடியாக குறைந்தது. கேரளப் பகுதிக்கு வெளியேற்றப்படும் நீர் 128 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மூன்று வாரத்திற்கும் மேலாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் நவ.18 ல் 141 அடியை எட்டியது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து 3348 கன அடியிலிருந்து 2790 கன அடியாக குறைந்தது. நீர்மட்டம் குறைந்து 140.80 அடியாக இருந்தது. ( மொத்த உயரம் 152 அடி)

தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 2000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 7342 மில்லியன் கனஅடியாகும்.நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து நீர் மட்டம் குறைவதால் கேரளப் பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த 4 ஷட்டர்களில், 3 ஷட்டர்கள் அடைத்து ஒரு ஷட்டர் மூலம் 128 கன அடி வெளியேற்றப்படுகிறது. இதற்கு முன் 1544 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் 160 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X