ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள்

Added : நவ 20, 2021
Share
ராஜபாளையம்:ராஜபாளையம் ஆண்டாள் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த யோகேஷ்- யாழினி தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அம்மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜாராம் கூறியதாவது: யாழினி கருவுற்ற உடனே சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது மூன்று கரு உருவாகி உள்ளதால் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க இயலாது. கருவை கலைத்து விடுங்கள் என கூறி

ராஜபாளையம்:ராஜபாளையம் ஆண்டாள் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த யோகேஷ்- யாழினி தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. அம்மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜாராம் கூறியதாவது:

யாழினி கருவுற்ற உடனே சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது மூன்று கரு உருவாகி உள்ளதால் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க இயலாது. கருவை கலைத்து விடுங்கள் என கூறி உள்ளனர்.2017ல் இங்கு ஏற்கனவே 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்ததை அறிந்து, 8 மாதமாக தங்கி இங்கு ஆலோசனை மேற்கொண்டனர்.

இதையடுத்து ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளோம், தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X