பொது செய்தி

தமிழ்நாடு

'3டி' தொழில்நுட்ப கண்புரை ஆப்பரேஷன் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை சாதனை

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை : நாட்டில் முதல் முறையாக '3டி' தொழில்நுட்பத்தில், 3 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து, எழும்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நேற்று, '3டி' தொழில்நுட்பத்திலான கண்புரை அறுவை சிகிச்சை, மூன்று நபர்களுக்கு செய்யப்பட்டது.மருத்துவமனைக்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அறுவை

சென்னை : நாட்டில் முதல் முறையாக '3டி' தொழில்நுட்பத்தில், 3 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து, எழும்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நேற்று, '3டி' தொழில்நுட்பத்திலான கண்புரை அறுவை சிகிச்சை, மூன்று நபர்களுக்கு செய்யப்பட்டது.மருத்துவமனைக்கு வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை பாராட்டினார்.அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

நாட்டிலேயே முதன் முறையாக, '3டி' தொழில்நுட்பம் வாயிலாக, கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025ம் ஆண்டுக்குள், கண் பார்வை குறைபாடு 0.25 சதவீதத்துக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு கண் மருத்துவ மனையில் இந்தாண்டு, 65 ஆயிரம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதுவரை, 20 ஆயிரத்து 670 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 10 ஆயிரம் நபர்களின் கண்கள் தானம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 2,213 நபர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளன.

மருத்துவமனைக்கு அருகே 66 கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கப்பட்டு, விரைவில் செயல்படும். 'நீட்' தேர்வு தீர்மானம் குறித்து, சட்ட வல்லுனர்களுடன் பேசி, கவனத்தில் எடுத்து கொள்வதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X