சிலவரி அரசியல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிலவரி அரசியல்

Added : நவ 20, 2021
Share
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளை, மக்களை வஞ்சிக்கும் புதிய சட்ட திட்டங்களை எதிர்காலத்தில் மத்திய அரசு அமல்படுத்த கூடாது.- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்வாக்குறுதி கொடுத்த திட்டங்கள் எதுவும்

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளை, மக்களை வஞ்சிக்கும் புதிய சட்ட திட்டங்களை எதிர்காலத்தில் மத்திய அரசு அமல்படுத்த கூடாது.
- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்
வாக்குறுதி கொடுத்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நீட் ரத்து செய்யப்படவில்லை. ஓ.ஏ.பி., அதிகரிக்கப்படவில்லை. குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. தமிழக மக்கள் தி.மு.க., வினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்
தமிழக உயர்கல்வி மாணவர்களின் கோரிக்கையான செமஸ்டர் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.- வாசன், த.மா.கா., தலைவர்மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் ரத்து. நுாற்றுக்கணக்கான உயிர்களை இழந்து, கடும் குளிரையும் பெரும் மழையையும் பொருட்படுத்தாமல் போராடிய லட்சக்கணக்கான விவசாய பெருமக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
.- வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர் தியாகம் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.
- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்
போராடுவோம், வெற்றிபெறுவோம். ஓராண்டு காலம் விவசாய இயக்கங்கள் நடத்திய போராட்டம் மாபெரும் வெற்றி. வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறுகிறது மோடி அரசு.
- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்
உயரிய லட்சியங்களோடு சமரசமின்றி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வெற்றி பெறும் என்ற வரலாற்றை இந்திய விவசாயிகள் மீண்டும் உயிர்ப்பித்து வெற்றிக் கொடியை நட்டுள்ளனர்.
- தமிமுன் அன்சாரி, ம.ஜ.க., தலைவர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X