பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில், தனியார் பள்ளி நிர்வாகத்திடம் இருந்த ஒரு ஏக்கர் அரசு நிலத்தை, வருவாய் துறையினர், நேற்று மீட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மீனாட்சி நகரில், ஏரி மற்றும் மழை நீர் கால்வாய் இடத்தை, தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, 3 ஏக்கரில் சுற்றுச்சுவர் மற்றும் கட்டடம் கட்டி இருந்தது.இது குறித்து அறிந்த வருவாய் துறையினர், 2018ல்
 ரூ.10 கோடி அரசு நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில், தனியார் பள்ளி நிர்வாகத்திடம் இருந்த ஒரு ஏக்கர் அரசு நிலத்தை, வருவாய் துறையினர், நேற்று மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி மீனாட்சி நகரில், ஏரி மற்றும் மழை நீர் கால்வாய் இடத்தை, தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, 3 ஏக்கரில் சுற்றுச்சுவர் மற்றும் கட்டடம் கட்டி இருந்தது.இது குறித்து அறிந்த வருவாய் துறையினர், 2018ல் சுற்றுச்சுவர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.இந்நிலையில் சில தினங்களாக பெய்த மழையால், மீனாட்சி நகர் வசிப்பிட பகுதியில், மழை நீர் தேங்கியது.பள்ளி கட்டடத்தால் தான், தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிக்கு வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, வண்டலுார் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் வசந்தி உள்ளிட்ட வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு இடத்திற்கு, நேற்று சென்றனர்.ஒரு ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த ஒரு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவருக்கு அமைத்திருந்த வேலியை ஜே.பி.சி., இயந்திரத்தால் அகற்றினர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X