மதுரை:மதுரையில் குண்டர் சட்ட கைது உத்தரவை எதிர்த்து 4 பேர் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரையில் 2020 நவ.,15 ல் முருகானந்தம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய தினேஷ்குமார் 25, அலெக்ஸ் 29, அழகுராஜா 25, ராஜா 21 ஆகியோர் மதுரை போலீஸ் கமிஷனரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யட்டனர். கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி தினேஷ்குமார் உட்பட 4 பேர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு: எம்.எஸ்.பாண்டியை கொலை செய்த முன்விரோதத்தில் முருகானந்தம் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினர் இடையிலான 'கேங்வார்' (கும்பல் யுத்தம்) கொலைகளுக்கு வழிவகுத்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கையாக ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும் கொலையால் மதுரை ஒரு விசித்திரமான சட்டம்- ஒழுங்கு பிரச்னையை எதிர்கொள்கிறது.பொது அமைதியை பராமரிக்கும் வகையில், உரிய முறையில் பரிசீலித்து குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தலையிட போதிய காரணங்கள் இல்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE