பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளுக்கு தாமதமாக செலுத்தப்படும் கோமாரி நோய் தடுப்பூசி பலனில்லை: கால்நடை வளர்ப்போர் வேதனை

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:மழைக்காலத்திற்கு முன் காணை நோய் வருவதை தடுக்கும் வகையில் செலுத்த வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசி மிக தாமதமாக மாடுகளுக்கு செலுத்தப்படுவதால் பயன் குறைவு ,என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு வாய் , கால்களில் காணை எனும் கோமாரி நோய் தாக்கப்படும் போது சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் இறக்க நேரிடும். கோடை மழை துவங்குவதற்கு முன்பாக

மதுரை:மழைக்காலத்திற்கு முன் காணை நோய் வருவதை தடுக்கும் வகையில் செலுத்த வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசி மிக தாமதமாக மாடுகளுக்கு செலுத்தப்படுவதால் பயன் குறைவு ,என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு வாய் , கால்களில் காணை எனும் கோமாரி நோய் தாக்கப்படும் போது சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் இறக்க நேரிடும். கோடை மழை துவங்குவதற்கு முன்பாக மார்ச், வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக செப். ல் என ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசி செலுத்தவேண்டும். அப்போது தான் காணை நோயிலிருந்து மாடுகளை பாதுகாக்க முடியும்.

ஆனால் மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோமாரி தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தப்படுகிறது.ஆண்டுக்கு இரண்டு முறையாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி 2009 முதல் 2019 வரை மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது.

2019 ல் தரமற்ற மருந்தால் தடுப்பூசி செலுத்தப்பட்ட பெரும்பாலான மாடுகள் காணை நோய் பாதிப்புக்குள்ளாகின. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2020 ஜனவரியில் மத்திய அரசின் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் (NADCP) அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் செப். 2020, மார்ச் 2021 ல் தடுப்பூசிப் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது செப்டம்பரில் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக தற்போது தான் பணியை துவக்கியுள்ளனர். பருவமழை துவங்கியது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் நோய் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் பெயருக்கு தடுப்பூசி பணிகள் துவங்கியுள்ளன என விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர்.தடுப்பூசிகளை மொத்தமாக பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதன வசதியும் பெரும்பாலான மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் இல்லை. இதனாலும் தடுப்பூசியின் வீரியத்தன்மை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில்,'தடுப்பூசி என்பது நோயிலிருந்து பாதுகாப்பதற்காக தான். மத்திய அரசிடம் தடுப்பூசி பெற்ற உடனேயே அக். 28 முதல் மாடுகளுக்கு செலுத்த துவங்கி விட்டோம். தற்போது வரை 50 சதவீத இலக்கு முடிந்துள்ளது. நவ. 30க்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாடு, கன்றுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X