கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்தை கட்டுப்படுத்த தனிப்படை கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில் உள்ள முக்கிய சாலைகள், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த, தனிப்படை அமைக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை, புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்க செயலர் பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு:குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் ஓட்டல் மற்றும் பாலன் டெம்போ

சென்னை : சென்னையில் உள்ள முக்கிய சாலைகள், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த, தனிப்படை அமைக்கும்படி, மாநகர போலீஸ் கமிஷனருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை, புதுவை நகர் சிறுதொழில் வியாபாரிகள் சங்க செயலர் பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு:குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஸ்ரீ பாலாஜி பவன் ஓட்டல் மற்றும் பாலன் டெம்போ நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் சிரமமம் ஏற்படுகிறது.

இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்துவதை, போலீஸ் கமிஷனர் மற்றும் பல்லாவரம் நகராட்சி கமிஷனர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலை, பிரதான சாலை என்பதால், அதிக போக்குவரத்து இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

சட்டவிரோதமாக வாகனங்களை சாலையில் நிறுத்த அனுமதித்தால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும். இலவசங்களை பெற்று, சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதாக, போக்குவரத்து போலீசாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

போலீஸ் கமிஷனரும், நகராட்சி அதிகாரிகளும், அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடமை தவறும் போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னையில் முக்கிய சாலைகளிலும், ஜி.எஸ்.டி., சாலையிலும், போக்குவரத்து கட்டுப்பாட்டை திறமையாக மேற்கொள்ள தனிப்படை அமைக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.இலவசங்கள், லஞ்சம், மாமூல் பெறுவதாக போலீசாருக்கு எதிராக வரும் புகார்கள் குறித்து, போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வர்த்தக நிறுவனங்களில் அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து விதிமீறல் செய்தால், உரிமம் ரத்து அல்லது உரிமம் புதுப்பிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X