பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே திட்டப்பணிகளுக்கு மண் எம்.பி.,க்கள் உதவ கோரிக்கை

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற தேவையான மண் அள்ள அனுமதி பெற உதவும்படி மதுரையில் நடந்த தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்களிடம் ரயில்வே கட்டுமானத்துறை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா வலியுறுத்தினார்.இதுகுறித்து பிரபுல்ல வர்மா பேசுகையில், ''தமிழகத்தில் ரயில்வே கோட்டங்கள் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன.

மதுரை:ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற தேவையான மண் அள்ள அனுமதி பெற உதவும்படி மதுரையில் நடந்த தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.,க்களிடம் ரயில்வே கட்டுமானத்துறை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரபுல்ல வர்மா பேசுகையில், ''தமிழகத்தில் ரயில்வே கோட்டங்கள் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. இத்திட்டங்களுக்கு மண் அள்ள கலெக்டர்களின் அனுமதி தேவைப்படுகிறது. ஆனால் மண் அள்ள அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. எனவே மண் அள்ள அனுமதி பெற எம்.பி.,க்கள் உதவிட வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்து தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர். எம்.பி., வெங்கடேசன் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X