பொது செய்தி

தமிழ்நாடு

லேப் டெக்னீசியன் பணிக்கு 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுரை:மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வும் லேப் டெக்னீசியன் பணிக்கு மதிப்பெண் அடிப்படையிலும் என இருவிதமாக தேர்வு நடக்கிறது. மதிப்பெண் அடிப்படையிலான நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:உணவு பாதுகாப்பு

மதுரை:மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வும் லேப் டெக்னீசியன் பணிக்கு மதிப்பெண் அடிப்படையிலும் என இருவிதமாக தேர்வு நடக்கிறது.

மதிப்பெண் அடிப்படையிலான நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், உயிர் வேதியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டே ஆட்கள் தேர்வாகின்றனர். லேப் டெக்னீசியன் பதவிக்கு பி.எஸ்சி.,யுடன் டிப்ளமோ படித்தவர்கள் தேவை என அறிவித்துள்ளது.

இதற்கு நவ., 30 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு எழுத்துத் தேர்வு வைக்க வில்லை. அதற்கு பதிலாக வெயிட்டேஜ் முறையில் டிகிரி டிப்ளமோவிற்கு 50 சதவீத மதிப்பெண்களும் பத்தாம் வகுப்பிற்கு 20, பிளஸ் 2 விற்கு 30 மதிப்பெண்கள் என நிர்ணயித்துள்ளது. அரசின் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்திய பின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் மதிப்பெண்கள் அதிகம் பெறுவது வழக்கமாகி விட்டது.
அதற்கு முன்பாக படித்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் குறைவாக கிடைப்பதால் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை.செவிலியர்கள், டாக்டர்கள் அனைவருமே எழுத்துத்தேர்வு மூலமே தேர்வாகின்றனர். எனவே வெயிட்டேஜ் முறையை ரத்து செய்து விட்டு எழுத்துத் தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X