பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் சிக்கிய 5 பேர் மீட்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : பெரியநந்தம் பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மாடு மேய்க்க சென்ற முதியவர், மற்றும் 20 ஆடுகளை மீட்ட, உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு, கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் பாலாற்றங்கரையோரம், மாந்தோப்பு அருகில், ஞானபிரகாசம், 36, என்பவர் தன் மனைவி மணிமேகலை, 31, மகன் நிமலன், 13; மகள் நிவேதிதா, 12,
 வெள்ளத்தில் சிக்கிய 5 பேர் மீட்பு

உத்திரமேரூர் : பெரியநந்தம் பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், மாடு மேய்க்க சென்ற முதியவர், மற்றும் 20 ஆடுகளை மீட்ட, உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு, கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த பெரியநத்தம் பாலாற்றங்கரையோரம், மாந்தோப்பு அருகில், ஞானபிரகாசம், 36, என்பவர் தன் மனைவி மணிமேகலை, 31, மகன் நிமலன், 13; மகள் நிவேதிதா, 12, ஆகியோருடன், தனியே வீடு கட்டி வசித்து வருகிறார்.நேற்று காலை, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஞானப்பிரகாசத்தின் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்தது.ஞானபிரகாசம் உட்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேரும், அவர் வளர்த்து வந்த, 20 ஆடுகளும், மாடு மேய்த்துக்கொண்டு இருந்த கன்னியப்பன், 60, என்பவரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.இது குறித்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றொரு மீட்பு பணிக்காக வெளியே சென்றதால், தீயணைப்பு மீட்பு பணி துறை மாவட்ட அலுவலர் குமார், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, உத்திரமேரூர் நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தங்களது மீட்பு வாகனத்தில் புறப்பட்டு, 25 கி.மீ., பெரியநத்தம் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.ஆனால், வெங்கச்சேரி செய்யாற்று பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், மானாம்பதி, பெருநகர், செவிலிமேடு, ஓரிக்கை வழியாக, 50 கி.மீ., துாரம் பயணித்து, பெரியநத்தம் கிராமத்தை அடைந்தனர்.

அங்கிருந்து, வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க, காலை 11:00 மணிக்கு, 1 கி.மீ., துாரத்திற்கு மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் படகில் பயணித்தனர்.வெள்ளநீரும், மரங்களும் நிறைந்த அப்பகுதியில், வீரர்கள் படகில் சென்றபோது, வெள்ளத்தில் இருந்து தப்பித்து, மரத்தில் தஞ்சமடைந்திருந்த தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தின.அவற்றை பொருட்படுத்தாமல் சென்ற உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, 12:00 மணிக்கு, வெள்ளத்தில் சிக்கிய ஞானபிரகாசம் குடும்பத்தினர் நான்கு பேர், அவரது 20 ஆடுகள் மற்றும் மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் கன்னியப்பனை பத்திரமாக மீட்டனர்.

வெள்ளத்தில் இருந்து குடும்பத்தினருடன் மீட்டதற்காக ஞானபிரகாசமும், முதியவர் கன்னியப்பனும், தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.பெரியநத்தம் ஊராட்சி தலைவர், கிராம மக்கள் மற்றும் வாலாஜாபாத் தனி தாசில்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர், உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X