பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்தில் திடீர் மாற்றம் 

Added : நவ 20, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : பாலாறு வெள்ளம், வாலாஜாபாதில் புகுந்ததால், வாகன போக்குவரத்தில், தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.பாலாற்றில், 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், வாலாஜாபாத் ரவுண்டானா மற்றும் பஸ் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள்; தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத்

வாலாஜாபாத் : பாலாறு வெள்ளம், வாலாஜாபாதில் புகுந்ததால், வாகன போக்குவரத்தில், தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பாலாற்றில், 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், வாலாஜாபாத் ரவுண்டானா மற்றும் பஸ் நிலையத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள்; தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் செல்லும் வாகனங்களில், தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் முத்தியால்பேட்டை, கரூர், மருதம், ஊத்துக்காடு, புளியம்பாக்கம் வழியாக, செங்கல்பட்டுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள், தென்னேரி கூட்டு சாலை, சுங்குவார்சத்திரம், பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரத்திற்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.மேலும், தாம்பரம் - வாலாஜாபாத் வரை இயக்கப்படும் வாகனங்கள், ஊத்துக்காடு வரை திருப்பிவிடப்படுகிறது. இதனால், 1.5 கி.மீ., நடந்து, வாலாஜாபாத் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது என, மக்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X