சீனா மின்னல் வேக ஏவுகணை அமெரிக்கா கடும் அச்சம்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்:சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை 'ஹைபர்சானிக்' ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் 'ரடார்' கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவைஇந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின்

வாஷிங்டன்:சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை 'ஹைபர்சானிக்' ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் 'ரடார்' கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவை
இந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் துணை தளபதி ஜான் ஹைடன் கூறியதாவது:கடந்த ஜூலையில் சீனா உலகைச் சுற்றி வரும் ஹைபர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. எனினும் அந்த சோதனை வெற்றி பெறவில்லை.சீனாவிற்கு திரும்பிய அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு பல கி.மீ. துாரம் முன்னதாக விழுந்தது. சீனா நுாற்றுக்கணக்கான புதிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்கா மீது சீனா அணு ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியது.ஆனால் சீனா நுாற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. நடுத்தர தொலைவு சென்று தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணையை ராணுவத்தில் சீனா சேர்த்துள்ளது.
ஆனால் அமெரிக்கா அதுபோல ஒரு ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியதை சீனா மறுத்துள்ளது. அதேசமயம் பலமுறை பயன்படுத்தும் விண்கல சோதனை நடத்தப்பட்டதாக சீனா மழுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
20-நவ-202113:04:57 IST Report Abuse
R Ravikumar அச்சுறுத்தல் உண்மை தான் . அமெரிக்காவிற்கு இணையான வல்லரசு என்று தற்போது சீனா நிரூபித்து கொண்டு இருக்கிறது . ஒன்றும் சொல்வதற்கு இல்லை . நாம் சீனாவின் உயரத்தை அடைய ஏதும் அதிசயம் அல்லது புரட்சி நடந்தால் தான் உண்டு . ராஜதந்திரமாக .. சீனாவிற்கு இன்னொரு எதிரியை ஏற்படுத்தி விட்டால் சிறிது மூச்சு விடலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X