சீனா மின்னல் வேக ஏவுகணை அமெரிக்கா கடும் அச்சம்| Dinamalar

சீனா மின்னல் வேக ஏவுகணை அமெரிக்கா கடும் அச்சம்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
வாஷிங்டன்:சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை 'ஹைபர்சானிக்' ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் 'ரடார்' கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவைஇந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின்

வாஷிங்டன்:சீனா சமீபத்தில் உலகைச் சுற்றி வரும் 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனையை நடத்தியதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு விரைந்து செல்லும் திறன் உடையவை 'ஹைபர்சானிக்' ஏவுகணைகள். நெடுந்தொலைவு சென்று உலக நாடுகளின் 'ரடார்' கண்களில் சிக்காமல் நொடியில் இலக்கைத் தாக்கி அழிக்க வல்லவை
இந்த ஏவுகணைகள்.இது குறித்து அமெரிக்க முப்படைகளின் துணை தளபதி ஜான் ஹைடன் கூறியதாவது:கடந்த ஜூலையில் சீனா உலகைச் சுற்றி வரும் ஹைபர்சானிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. எனினும் அந்த சோதனை வெற்றி பெறவில்லை.சீனாவிற்கு திரும்பிய அந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு பல கி.மீ. துாரம் முன்னதாக விழுந்தது. சீனா நுாற்றுக்கணக்கான புதிய ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்கா மீது சீனா அணு ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா ஒன்பது ஏவுகணை சோதனைகளை நடத்தியது.ஆனால் சீனா நுாற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. நடுத்தர தொலைவு சென்று தாக்கும் ஹைபர்சானிக் ஏவுகணையை ராணுவத்தில் சீனா சேர்த்துள்ளது.
ஆனால் அமெரிக்கா அதுபோல ஒரு ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தியதை சீனா மறுத்துள்ளது. அதேசமயம் பலமுறை பயன்படுத்தும் விண்கல சோதனை நடத்தப்பட்டதாக சீனா மழுப்பியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X