ஒப்பந்தங்களை மீறும் சீனா: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021
Share
Advertisement
சிங்கப்பூர்:''ஒப்பந்தங்களை தொடர்ந்து மீறி வருவதால் சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமாக உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.சிங்கப்பூரில் 'வல்லரசு நாடுகளுக்கு இடையேயான அதிகார போட்டி: தோன்றியுள்ள உலக ஒழுங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.இந்தியாவுடனான இரு தரப்பு உறவில் நாம் எங்கு

சிங்கப்பூர்:''ஒப்பந்தங்களை தொடர்ந்து மீறி வருவதால் சீனாவுடனான இந்தியாவின் உறவு மோசமாக உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 'வல்லரசு நாடுகளுக்கு இடையேயான அதிகார போட்டி: தோன்றியுள்ள உலக ஒழுங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.இந்தியாவுடனான இரு தரப்பு உறவில் நாம் எங்கு உள்ளோம்; எது சரியாக இல்லை என்பதில் சீன தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கும் என நான் நினைக்கவில்லை.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை பல முறை சந்தித்து பேசியுள்ளேன். நான் தெளிவாகவும், நியாயமாகவும், புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பேசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தெளிவு இல்லாமல் நான் பேசவில்லை.இந்தியா -- சீனா உறவு மோசமாக உள்ளது. இதற்கு இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா தொடர்ச்சியாக மீறியதே காரணம். இதற்கு அவர்களிடம் உரிய காரணம் இல்லை.
நம் உறவை அவர்கள் எங்கு எடுத்து செல்கின்றனர் என்பது குறித்து, நாம் யோசிக்க வேண்டியது உள்ளது. இதற்கு அவர்கள் தான், பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


சுகாதாரத்துறையில் பெரும் மாற்றம்


சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கில் நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சி பற்றி ஜெய்சங்கர் பேசியதாவது: கொரோனா தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டது.
எனினும் இதனால் சில நன்மைகளும் ஏற்பட்டன.கொரோனா தொற்றால் இந்தியாவில் சுகாதார துறை மாபெரும் மாற்றம் அடைந்துள்ளது. தொற்று பரவலுக்கு முன் நாட்டில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வென்டிலேட்டர்களை தயாரித்து வந்தன. 'என் 95' முக கவசம் தயாரிக்கப்பட வில்லை.கொரோனா பரவலுக்கு பின் வென்டிலேட்டர்கள் தயாரிப்பு அதிகரித்துள்ளது.
முககவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு சாதனங்கள் இந்தியாவில் அதிகளவில் தயாரிக்கப் படுகின்றன. பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்தால், சுகாதாரத்துறை மாபெரும் மாற்றம் அடைந்துள்ளது.கொரோனாவுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்தன. ஆனால், இந்தியா தயாரித்த தடுப்பூசிதான், சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளது. பல நாடுகள், இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X