சென்னை:'அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகள் பெற்றுச் சென்ற உரிமை சீட்டுகளை உரியவர்களிடம் வழங்க வேண்டும்' என கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் அறிவிப்பு:கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் 2018 ஜன. 29ல் துவக்கப்பட்டன.உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் சேர்ப்பித்து ரசீது பெற்றுள்ளவர்களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமே நடக்க உள்ள கட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிடவும் ஓட்டளிக்கவும் தகுதி உடையவர்கள்.இந்நிலையில் தலைமை அலுவலகத்தில் இருந்து உறுப்பினர் உரிமை சீட்டுகளைப் பெற்று சென்றவர்களில் சிலர் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை எனத் தெரிய வருகிறது.
ஒவ்வொருவரும் எவ்வளவு கார்டுகளை பெற்றுச் சென்றுள்ளனர் என்ற விபரம் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பினர் உரிமை சீட்டுகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைத்து அதன் விபரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கவும். உரியவர்களிடம் வழங்கவில்லை எனப் புகார் வருமானால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு கட்சி தேர்தலில் போட்டியிடவும் ஓட்டளிக்கவும் தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE