பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் வாயிலாக அடையாளம் பத்திரப்பதிவு துறையில் நீட்டிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:பத்திரப் பதிவுக்கு வருவோரை ஆதார் வாயிலாக அடையாளம் சரிபார்க்கும் திட்டத்தை மேலும் 100 அலுவலகங்களுக்கு நீட்டித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது பத்திரப்பதிவு பணிகள்

சென்னை:பத்திரப் பதிவுக்கு வருவோரை ஆதார் வாயிலாக அடையாளம் சரிபார்க்கும் திட்டத்தை மேலும் 100 அலுவலகங்களுக்கு நீட்டித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்து பரிமாற்ற ஆவணங்களை பதிவு செய்ய 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது பத்திரப்பதிவு பணிகள் 'ஸ்டார் 2.0' என்ற சாப்ட்வேர் வாயிலாக ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
சொத்து விற்பவர் வாங்குபவர் குறித்த அடையாளங்களை சரிபார்க்கும் பணிகள் துல்லியமாக்கப்பட்டு உள்ளன.இதன்படி பதிவுக்கு வருவோரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அடையாள விபரங்களை சரிபார்க்க சார் - பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது. சார் - பதிவாளரின் கணினியில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தற்போது 109 சார் - பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி முதற்கட்டமாக ஏற்படுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 100 அலுவலகங்களுக்கு டிச. 1 முதல் இந்த வசதி விரிவு படுத்தப் படுகிறது. மதுரை மண்டலத்தில் 18; திருநெல்வேலியில் 14; கடலுாரில் 12; சென்னை கோவை சேலம் தஞ்சை மண்டலங்களில் தலா 10; திருச்சி வேலுாரில் தலா எட்டு சார் - பதிவாளர் அலுவலகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படஉள்ளது.இதற்கான உத்தரவை பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X