அமெரிக்க அதிபராக தற்காலிகமாக பொறுப்பேற்ற கமலா ஹாரிஸ்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.அமெரிக்கா அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்,79 பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்,47 பதவி வகிக்கிறார். இன்று (நவ.20) அதிபர் ஜோ பைடனுக்கு 79 வது பிறந்த நாள்.இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அதிபர் ஜோ
Kamala Harris,US presidency, White House

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்கா அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன்,79 பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்,47 பதவி வகிக்கிறார். இன்று (நவ.20) அதிபர் ஜோ பைடனுக்கு 79 வது பிறந்த நாள்.


latest tamil news



இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக மயக்கவியல் (அனஸ்தீசியா) முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் சிகிச்சையிலிருந்து ஜோ பைடன் குணமடைந்தாகவும், அதுவரை ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க (பொறுப்பு) அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு நிகழ்வு 2005, 2007 ஆண்டில் ஜியார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
20-நவ-202113:14:10 IST Report Abuse
Velan Iyengaar நம்மவா யாரும் இதற்க்கு ஏன் வொய் மார் தட்டிக்கொள்ளல?
Rate this:
Cancel
20-நவ-202112:53:18 IST Report Abuse
CM Prabhakaran 0...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
20-நவ-202111:28:00 IST Report Abuse
raja இதுக்கெல்லாம் நம்ப OPS தான் மிக பொருத்தமானவர்.. அம்மா சிறையிலிருந்து திரும்பி வந்ததும் பதவியை பவ்யமாக திருப்பி கொடுத்தவர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X