பொது செய்தி

தமிழ்நாடு

ஜன. 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
சென்னை:''கல்லுாரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின் ஜனவரி 20 முதல் நடத்தப்படும்'' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் 'ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு கல்லுாரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள்
 ஜன. 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை:''கல்லுாரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின் ஜனவரி 20 முதல் நடத்தப்படும்'' என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் 'ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு கல்லுாரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் உயர் கல்வி செயலர் கார்த்திகேயன் பல்கலை அதிகாரிகள் இணைந்து மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் தலைமை செயலகத்தில் பேச்சு நடத்தினர்.

பின் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:செமஸ்டர் தேர்வு குறித்து 11 அமைப்புகளை சேர்ந்த மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். 'ஆன்லைன் தேர்வு வேண்டாம். நேரடி தேர்வு நடத்துங்கள்; ஆனால் தேர்வுக்கு கூடுதலாக ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும்' என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்து வகை கல்லுாரிகளிலும் ஜன. 20 முதல் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். அரசு தன்னாட்சி அந்தஸ்து உள்ள அனைத்து இன்ஜினியரிங் கலை அறிவியல் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.வழக்கு வாபஸ்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
ஜனவரி தேர்வை எழுதுவதற்கு தினமும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு வர வேண்டும். பொதுவாக செமஸ்டர் என்றால் 90 நாட்கள் தான். தற்போது அதை விட கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளோம். இந்த அவகாசத்தில் பாடத்திட்டம் வரையறை செய்யப்பட்டு செமஸ்டர் தேர்வுக்கு முன் அதற்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.மேலும் மாதிரி தேர்வும் நடத்தப்படும்.
இந்த முடிவுக்கு ஏகமனதாக ஒத்துழைப்பு அளித்துள்ள மாணவர்களுக்கு நன்றி. வரும் காலத்திலும் மாணவர்களை அடிக்கடி அழைத்து பேசி கல்வி தொடர்பான முடிவுகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X