பொது செய்தி

தமிழ்நாடு

‛ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்' ஆவணப்படம் வெளியீடு

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், 'ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம்' என்ற, தொல்லியல் ஆவணப்படம், நிறுவன வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.நாட்டில் முதன் முதலாக, துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது. உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல் கூறுகளுக்கும், ஆதிச்சநல்லுாரில் வாழ்ந்த மனிதர்களின்


சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், 'ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம்' என்ற, தொல்லியல் ஆவணப்படம், நிறுவன வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.latest tamil news
நாட்டில் முதன் முதலாக, துாத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுாரில் தான் அகழாய்வு நடந்தது. உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல் கூறுகளுக்கும், ஆதிச்சநல்லுாரில் வாழ்ந்த மனிதர்களின் மரபியல் கூறுகளுக்கும் தொடர்பு உள்ளதை, அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தற்போது, மத்திய அரசு சார்பில், அங்கு கள அருங்காட்சியகம் அமைய உள்ளது. மேலும், அங்கு அகழாய்வும் நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு அகழாய்வு செய்யப்பட்ட விதம், அதில் கிடைத்த தொல்பொருட்கள், அதற்கும் தமிழர்களின் நாகரிக பழமைக்குமான தொடர்பு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில், 'ஆதிச்சநல்லுார்- தாமிரபரணி நாகரிகம்' என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
இரண்டு மணி நேர ஆவணப்படம், இரண்டு பாகங்களாக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வலைதளத்தில், நேற்று வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கியுள்ளார்.ஆவணப்படத்தை காண https://www.cict.in/veliyeedugal_kanoli-padangal.php என்ற இணைப்பை பயன்படுத்தலாம்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
20-நவ-202111:29:06 IST Report Abuse
Vivekanandan Mahalingam தோண்டி தோண்டி முதுமக்கள் தாழி எடுக்கும் ஆராய்ச்சி - கோடிக்கணக்கில் செலவு - காஞ்சிபுரம், நாளாந்த, வாரணாசி போன்ற நகரங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உள்ள நகரங்கள் - அங்கே அகழ்வாராய்ச்சி செய்தால் தான் உண்மை தெரியும்
Rate this:
Cancel
20-நவ-202109:12:10 IST Report Abuse
ஆரூர் ரங் இதனால் மாநிலம் முன்னேறிவிடுமா?🤔🙄 வறுமை ஒழியுமா ?
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202109:54:04 IST Report Abuse
Kasimani Baskaranஎப்பொழுதாவது கம்பு சுத்த பயன்படும். மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற புகாரையும் சொல்லலாம்....
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
20-நவ-202110:03:03 IST Report Abuse
Sidhaarthவரலாறு இருக்குறவங்க பேசுவாங்க நாடோடி கூட்டத்துக்கு மொழியும் கிடையாது. கோவிலும் கிடையாது. சொந்த நாடும் கிடையாது. வரலாறும் கிடையாது. என்ன செய்ய ?வறுமை ஒழியுமான்னு வயிறெரியத்தான் முடியும்....
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202112:30:53 IST Report Abuse
Kasimani Baskaran"வறுமை ஒழியுமான்னு வயிறெரியத்தான் முடியும்" - செங்கோட்டை (அ)சிங்கமே... திமுக சொன்ன சமூக நீதியை தவறாக புரிந்து கொண்டு இப்படி பிதற்ற வேண்டாம். அரை நூற்றாண்டு திராவிடர்கள்தான் தமிழகத்தை ஆண்டார்கள் - ஆனால் சாதிச்சான்றிதழ் கூட வாங்க முடியாமல் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியுமா? அது போகட்டும் சாராயத்தால் வரும் வருமை மற்றும் உயிர்ச்சேதமும், சமூகச்சீறழிவும் தெரியுமா? எத்தனை இளம் பெண்கள் விதவையானார்கள் என்பதாவது தெரியுமா?...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202107:38:25 IST Report Abuse
Kasimani Baskaran 'கல் தோன்றி மண் தோன்றாக்காலத்து மூத்த குடியை' வெறும் சில ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று சொல்வது கேவலம். இவன்களும் இவன்களின் அகழ்வாராய்ச்சியும்...
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
20-நவ-202110:04:10 IST Report Abuse
Sidhaarthஆனா ராமர் சிலை கிடைச்சிருந்தா சந்தோசபட்டிருப்பீங்க இல்ல ???...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-நவ-202112:36:52 IST Report Abuse
Kasimani Baskaran"ராமர் சிலை கிடைச்சிருந்தா" - கலியும் ஆரம்பித்து ஐயாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. கலியுகம் மும்மூர்த்திகளில் அழிவின் நாயகரான சிவனின் முழு ஆதிக்கமும் பெற்றது. ஆகவே தோண்டினால் சிவலிங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இராமர் விஷ்னுவாக எங்காவது ஓரிரு இடத்தில் இருப்பார். தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல இடங்களில் சிவலிங்கங்களும், விஷ்னு சிலைகளும் கிடைப்பது சர்வசாதாரணம். தமிழ் கல்வெட்டுக்கள் பிலிப்பைன்ஸில் கூட கிடைத்திருக்கிறது. ஆராயத்தான் தமிழன் வரவேயில்லை. ஒரு காலத்தில் மொத்த ஆசியாவையும் ஆக்கிரமித்த ஒரு நாகரீகத்தை நாலு சட்டி பாணைக்குள் அடைக்க முயல்வது சிறுமைப்படுத்துவது மட்டுமல்ல அறிவீனமும் கூட....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X