அரசியல் செய்தி

தமிழ்நாடு

கனமழையால் பாதிப்பு; குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், நேற்று(நவ.,19) பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரம் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின்


சென்னை : கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், நேற்று(நவ.,19) பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



latest tamil news




சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரம் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசை வலியுறுத்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள பா.ஜ.,வின் 11 மாவட்டங்களில், அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news



சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி, சிறப்பு அழைப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் துரைசாமி பேசும்போது, ''மழை வெள்ள பாதிப்பை சரிசெய்வதற்கு, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணத்தை உடனே அறிவித்து, அரசு விரைவாக வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202118:57:03 IST Report Abuse
அப்புசாமி அண்ணாமலையார் படத்தோட மோடி ஐயா படமும் போட்டிருக்கே... அவரும் ஓசி கும்பலை ஆதரிக்கிறாரா? அப்படீன்ன, மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 50 சதவீதம் போடலாமே...
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
20-நவ-202116:57:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சொந்த கிணத்தில் தவறாக விழுந்த சிறுபாண்மை குடும்ப குழந்தைக்கு மட்டும் கோடி கணக்கில் பணத்தை கொடுக்க சொன்ன ஸ்டாலின் மற்றும் கூட்டணியினர் அரசாங்கத்தின் தவறினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிரமமின்றி வாழ் நிறய பண உதவி செய்யவேண்டும் .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-நவ-202115:55:47 IST Report Abuse
Lion Drsekar ஆக்கிரமிப்புகளைத் தட்டிக்கேட்டக்க எந்த ஒரு அமைப்பும் இல்லை, இவர்களாகவே ஏற்படுத்திய அழிவுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்க அவனவன் போட்டிவேரு, யாருமே மக்களுக்காக இல்லை, அப்படி இருந்திருந்தால் சீனா மற்றும் வெளிநாடுகளில் இருப்பதுபோல் மழைநீரை கடலுக்கு அனுபபமல் சேமிக்க ஏற்படு செய்திருக்கலாமே, ஒரு ஆண்டா இரண்டு ஆண்டா இவர்களுக்கு மக்களின் உயிர் ஒரு விளையாட்டு, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X