சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் கிராமங்களில் தேங்குது கழிவு நீர்; ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சிவகாசி- -'தொடர் மழையால் கிராமங்களில் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்துகிறது,' என ,ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.சிவகாசி ஒன்றிய கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. துணை த்தலைவர் விவேகன்ராஜ், பி.டி.ஓ., க்கள் சீனிவாசன், ராம்ராஜ் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவா தம்:கவிதா (தி.மு.க.,) : தேவர்குளம் ஊராட்சி

சிவகாசி- -'தொடர் மழையால் கிராமங்களில் தெருக்களில் கழிவுநீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்துகிறது,' என ,ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.சிவகாசி ஒன்றிய கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. துணை த்தலைவர் விவேகன்ராஜ், பி.டி.ஓ., க்கள் சீனிவாசன், ராம்ராஜ் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவா தம்:கவிதா (தி.மு.க.,) : தேவர்குளம் ஊராட்சி இ.பி.காலனியில் உள்ள நான்கு தெருக்களில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது. ஏற்கனவே புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.அன்பரசு (தி.மு.க.,): மீனம்பட்டி திடீர் காலனியில் மழையால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி வெளியேற்ற வழியில்லை. மீனம்பட்டி தெற்கூர் கண்மாயில் கழிவு நீர் தேங்கி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.சுடர்விழி (அ.தி.மு.க.,): பள்ளபட்டி விசாலாட்சி நகரில் தெருவில் சாக்கடை துார்வாரப்படவில்லை.ஒன்றிய தலைவர்: மழையினால் இது போன்ற பிரச்னைகள் வருகிறது. கழிவுநீர் அகற்றப்படும். தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.சண்முகத்தாய் (தி.மு.க.,): செங்கமல நாச்சியார் புரத்தில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது . இப் பகுதியில் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.துணைத் தலைவர்: குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.சங்கையா, (தி.மு.க.,): பள்ளபட்டி இந்திரா நகரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டு தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.பி.டி.ஓ.,: சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.முருகன், (காங்.,): பள்ளபட்டி ஊராட்சி அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும்.ஒன்றிய தலைவர்: பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.மீனாட்சி (அ.தி.மு.க.,): வெள்ளுாரில் உள்ள அங்கன்வாடி மையம், சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும்.துணைத் தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X