பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு புதியரக தீவனங்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டைஇன்றைய கால கட்டத்தில் விவசாயம் செய்வதில் பலவித பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டியுள்ளது. பலவித இடர்பாடுகளை எதிர்கொண்டுதான் விவசாயம் செய்து வருகின்றனர். அத்துடன் விவசாயத்திற்கு இணையான தொழிலான கால்நடை வளர்ப்பிலும் போதுமான தீவனங்கள் கிடைக்காமல் அவற்றை பாதுகாக்க முடியாமல் துன்பப்படுகின்றனர். தீவனங்கள் கிடைக்காததால் பலர் கால்நடைகளை விற்று

அருப்புக்கோட்டைஇன்றைய கால கட்டத்தில் விவசாயம் செய்வதில் பலவித பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்க வேண்டியுள்ளது. பலவித இடர்பாடுகளை எதிர்கொண்டுதான் விவசாயம் செய்து வருகின்றனர். அத்துடன் விவசாயத்திற்கு இணையான தொழிலான கால்நடை வளர்ப்பிலும் போதுமான தீவனங்கள் கிடைக்காமல் அவற்றை பாதுகாக்க முடியாமல் துன்பப்படுகின்றனர். தீவனங்கள் கிடைக்காததால் பலர் கால்நடைகளை விற்று விடுகின்றனர். சத்தான தீவனங்கள் கிடைக்காததால் மாடுகள் சத்தான பால் தருவதில்லை. இவற்றை கருத்தில் கொண்டு கால்நடைகளை மேம்படுத்த சத்தான தீவனங்களில் புதிய பயிர் ரகங்கள் பயிரிடுதல் , அவற்றின் தொழில்நுட்பங்களை திறம்பட கையாள்வதன் மூலம் கால்நடைகள் உற்பத்தியை அதிகரிக்க அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு பல்கலை தீவன பயிர் துறை இணைந்து மேம்படுத்தப்பட்ட தீவன பயிர் ரகங்கள் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடத்தியது. பங்கேற்ற விவசாயிகளின் 'பீட்பேக்' இதோ...அவசியமான பயிற்சிகோபி கண்ணன், விவசாயி, ஆத்திப்பட்டி : எனது கிராமத்தில் 25 ஏக்கரில் மானாவாரி விவசாயம் செய்து வருகிறேன். இங்கு நடந்த மேம்படுத்தப்பட்ட தீவனப் பயிற்சி நன்கு பயனுள்ளதாக இருந்தது. புதிய ரகங்கள் மூலம் தீவனத்தை பெருக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி தந்தனர்.புதிய யுக்தியில் தீவனங்கள்வீரபோஸ், விவசாயி, மெட்டுக்குண்டு: நான் 30 ஆண்டாக விவசாயம் செய்து வருகிறேன். கால்நடைகளுக்கு தேவையான புதிய ரகங்கள் பயிரிட தொழில்நுட்பங்களை விளக்கினர். கம்பு, தட்டை பயிறு தீவன பயிரான புதிய யுக்திகளை விளக்கினர். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு, புதிய ரக பயிர்களை பயிரிட்டு கால்நடைகளை பெருக்கவும், சத்தான உணவாக கொடுக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. இது கால கட்டத்திற்கு ஏற்ற பயிற்சி.விவசாயிகள் ஆர்வம்சுமித்ரா, கால்நடை டாக்டர் : போதுமான சத்தான தீவனங்கள் இன்றி கால்நடைகள் உள்ளன. கிடைத்தை தின்று வளருகிறது. விவசாயிகளாலும் தேவையான தீவனங்களை அவற்றிற்கு கொடுக்க முடியவில்லை. இந்த மாறுபட்ட பயிற்சியில் புதிய ரக பயிர்கள் மூலம்தீவன உற்பத்தி, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை ஆர்வத்துடன் கற்று கொண்டனர்.நவீன தொழில்நுட்பங்கள்கணேசன், தலைவர், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக தீவனப் பயிர் துறை : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பல துறைகள் இருந்தாலும் தீவனத்திற்கு என்று ஒரு துறை தனியாக உள்ளது. கால்நடைகள் வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தீவனங்களை புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பயிரிடுதல், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பயிரிடுதல் போன்றவை குறித்து பயிற்சி கொடுக்கிறோம். கால்நடைகளுக்கு சத்தான, குறைந்த விலையில் சமச்சீரான தீவன பயிர்க்ளை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.பலவிதமான பயிற்சிகள்சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர்: வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகிறோம். கால்நடைகளுக்கு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தீவனப் பயிர்களை விளைவிப்பது குறித்தான பயிற்சி அளித்துள்ளோம். விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X