ஓட்டல் முன்பு தேங்கும் எச்சில் இலைகள்; கண்டுக்காத ஸ்ரீவி. நகராட்சி மீது மக்கள் அதிருப்தி

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துாரில் ஓட்டல்களில் சேரும் எச்சில் இலைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்றாததால் கடைகள் முன்பு தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நகரில் சிறியதும், பெரியதுமாக 200க்கு மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. பஜார் வீதிகளில் மட்டும் 50க்கு மேற்பட்ட பெரிய ஓட்டல்கள் உள்ளன. இங்கு தினமும் சேரும் எச்சில்

ஸ்ரீவில்லிபுத்துார்-ஸ்ரீவில்லிபுத்துாரில் ஓட்டல்களில் சேரும் எச்சில் இலைகளை நகராட்சி நிர்வாகம் தினமும் அகற்றாததால் கடைகள் முன்பு தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நகரில் சிறியதும், பெரியதுமாக 200க்கு மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. பஜார் வீதிகளில் மட்டும் 50க்கு மேற்பட்ட பெரிய ஓட்டல்கள் உள்ளன. இங்கு தினமும் சேரும் எச்சில் இலைகள் பிளாஸ்டிக் டிரம்மில் சேகரித்து இரவு 10 :00 மணிக்கு மேல் நகராட்சி துாய்மை பணியாளர்கள் அள்ளி சென்றனர். இதற்காக ஒவ்வொரு ஓட்டலுக்கும் மாதம் ரூ.300 வீதம் வசூலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு எச்சில் இலைகளை அள்ள நகராட்சி நிர்வாகம் மறுத்து தனியார் ஊழியர்கள் மூலம் அள்ளப்பப்பட்டு வந்தது.இதுவும் தினசரி அள்ளப்படாததால் ஒவ்வொரு ஓட்டல் முன்பும் எச்சில் இலைகள் தேங்கி கிடக்கிறது. குப்பை வரி வாங்காத காலத்தில்கூட நகரின் பஜார் வீதிகள், தெருக்கள் துாய்மையாக இருந்தன. ஆனால் தற்போது குப்பை வரி வாங்கியும் தெருக்களிலும், வீதிகளிலும் கழிவுகளும் தேங்கி கிடக்கிறது.தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் பஜார் வீதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. நகராட்சியின் இத்தகைய செயல்பாடு பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.கலெக்டர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடி கள ஆய்வு செய்து தூய்மை நகராக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X