பொது செய்தி

இந்தியா

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரணம்; அதிகாரிகளுக்கு முதல்வர் பொம்மை உத்தரவு

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''மழை பாதிப்பு பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகளில் மேற்கொள்ள வேண்டும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரில், முதல்வர் அலுவலகமான கிருஷ்ணாவில், வெள்ள பாதிப்பு பகுதிகளின் மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை, காணோலி காட்சி மூலம், நேற்று ஆலோசனை நடத்தினார்.முதல்வர் பேசியதாவது:மழை பாதிப்பு


பெங்களூரு : ''மழை பாதிப்பு பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகளில் மேற்கொள்ள வேண்டும்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரில், முதல்வர் அலுவலகமான கிருஷ்ணாவில், வெள்ள பாதிப்பு பகுதிகளின் மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை, காணோலி காட்சி மூலம், நேற்று ஆலோசனை நடத்தினார்.முதல்வர் பேசியதாவது:மழை பாதிப்பு பகுதிகளில், அதிகாரிகள் உடனடியாக நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும். நஷ்டமடைந்த மக்களுக்கு, அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். குறிப்பாக கடலோர பகுதிகள், மலைப்பகுதி, பெங்களூரு, கித்துார் - கர்நாடகா, கல்யாண - கர்நாடகா உட்பட, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தாமதிக்காமல் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆற்றங்கரை பகுதிகள், தாழ்வான பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றுவது, தேவையான இடங்களில் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.மாணவர் விடுதிகள், குழந்தைகள் காப்பகம், அரசு கட்டடங்களில், மக்களை தங்க வைக்கலாம். சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாணவர் விடுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடக்கைகளுடன், மக்கள் தங்க வைக்க வேண்டும்.வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ஒருங்கிணைந்து, மீட்பு பணிகளை செய்ய வேண்டும்.மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தாமதமாக்குவதை, அரசு சகிக்காது. அந்தந்த மாவட்ட கருவூலத்தில் உள்ள நிதியை பயன்படுத்தி, நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

போர்வை, மெத்தை, உணவு உட்பட, அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். நிவாரணம் வழங்குவதில், பொருளாதார நெருக்கடியை, காரணம் காண்பிக்கக்கூடாது.எவ்வளவு நிதி தேவையென்றாலும், வழங்க அரசு தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை காப்பது, அரசின் முதல் கடமை. தயக்கத்தை விட்டு பணியாற்ற வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளில், மக்களை இடமாற்ற படகை பயன்படுத்துங்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படையினருடன், அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும்.வெள்ளம் வடிந்த பின், அதிகாரிகள் எங்கெங்கு, விளைச்சல் சேதம் ஏற்பட்டுள்ளதோ, அங்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விதிமுறைப்படியே, நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X