பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் தொடரும் மழையால் இடிந்து தரைமட்டமான கட்டடம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், 60 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இடியும் முன்பே அதில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பெங்களூரு ஹலசூரு லிடோ மால் அருகே உள்ள மில்க் மேன் ஸ்ட்ரீட்டில் சங்கர், 45 என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டடம் உள்ளது. இதில் அவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.அறுபது ஆண்டு

பெங்களூரு : பெங்களூரில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், 60 ஆண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இடியும் முன்பே அதில் இருந்தவர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு ஹலசூரு லிடோ மால் அருகே உள்ள மில்க் மேன் ஸ்ட்ரீட்டில் சங்கர், 45 என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடி கட்டடம் உள்ளது. இதில் அவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார்.அறுபது ஆண்டு பழமையான இந்த கட்டடம் ஏற்கனவே இடியும் நிலையில் இருந்ததால், பி.பி.எம்.பி.. சார்பில் உரிமையாளருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது.ஆனாலும் அவர் கட்டடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் சுவர்கள் ஈரமாகி எந்த நேரத்திலும் இடியலாம் என்ற நிலையில் இருந்ததால், அதில் இருந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு காலி செய்து வேறு இடத்துக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு முதலே படிப்படியாக இடிய தொடங்கியது. நேற்று அதிகாலையில் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும், மூன்று இரு சக்கர வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தது.மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா சம்பவ இடத்துக்கு வந்து பரிசீலனை செய்தார். இடிந்த இடத்தின் அருகில் மேலும் இரண்டு கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

எனவே, அந்த கட்டடங்ளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இடிபாடுகள் அகற்றப்படும் என கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.அந்த இடத்துக்கு யாரும் வராத வண்ணம் மாநகராட்சி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X