தமிழ்நாடு

திட்டங்கள் பாழ்; வடிகால்கள் இன்றி சேதமாகும் ரோடுகள்; அதிகாரிகள் மெத்தனத்தால் மக்கள் தவிப்பு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராஜபாளையம்-விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் முறையான வடிகால் இன்றி மழை நீர் தேங்குவதால் ரோடுகள் சேதமாகி வருவது தொடர்கிறது.பொது மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு முறையான சாலைகள் அவசியம். அவை தேசிய, மாநில, மாவட்ட, நகர்ப்புற சாலைகள் என பல வகையில் அமைந்துள்ளன. இவற்றில் ஒவ்வொரு வகைக்கு ஏற்ப தரமான சாலைகள் அமைப்பது அந்தந்த அமைப்பின் கடமை. இந்த சாலைகள் ரூ.
 திட்டங்கள் பாழ்;   வடிகால்கள் இன்றி சேதமாகும் ரோடுகள்;  அதிகாரிகள் மெத்தனத்தால் மக்கள் தவிப்பு

ராஜபாளையம்-விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் முறையான வடிகால் இன்றி மழை நீர் தேங்குவதால் ரோடுகள் சேதமாகி வருவது தொடர்கிறது.

பொது மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு முறையான சாலைகள் அவசியம். அவை தேசிய, மாநில, மாவட்ட, நகர்ப்புற சாலைகள் என பல வகையில் அமைந்துள்ளன. இவற்றில் ஒவ்வொரு வகைக்கு ஏற்ப தரமான சாலைகள் அமைப்பது அந்தந்த அமைப்பின் கடமை. இந்த சாலைகள் ரூ. கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்பட்டு, இவற்றை கண்காணிப்பதற்கு தகுந்த பொறியாளர்கள் அரசு சார்பில் நியமிக்கப்பட்டு அதன் தரம் சோதிக்கப்படுகிறது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைப்பகுதிகளில் அமைக்கப்படும் ரோடுகளில் நகர்ப்பகுதி நுழையும் போது சரியான வடிகால் இன்றி , மழையின் போது மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடும் வெயிலுக்கு தாங்கும் இத்தகைய ரோடுகள் ஒரு மழைக்கு பல் இளிக்க ஆரம்பித்து விடுகிறது. வடிகால் அமைத்த ரோடுகளில் ஆக்கிரமிப்பால் வடிகால்கள் காணாமல் போய்விடுகின்றன. இதன் மீது கடைகளை நீட்டியும், மெயின் ரோடு வரை விஸ்தரிப்பவர்களால் மழை நீரின் போது வடிய வேண்டி நீர் ரோடுகளில் தேங்கி நிற்கிறது. தொடர் மழையின்போது ரோடுகளில் தண்ணீர் தேங்கி பெயர்ந்து பள்ளமாக போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறி விடுகிறது. இது போன்ற வடிகால்களை கண்டறிந்து மீட்பதோடு,இல்லாத ரோடுகளில் வடிகால் ஏற்படுத்த துறையினர் முன்வர வேண்டும்..........

.மெத்தனத்தால் அவதி

ரோடுகள் அமைக்கப்படுவதோடு அவற்றில் நீர் தேங்காதபடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனால் ஏற்படும் மெத்தனத்தால் அரசின் நிதி வீணாவதோடு புதிய ரோடுகள் தொடங்குவதற்கான காலம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ராஜபாளையம் தென்காசி ரோடு, டி.பி .மில்ஸ் ரோடு, செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம், தளவாய்புரம், சேத்துார் மாரியம்மன் கோயில் முன்பு என மாவட்டத்திலங் பல இடங்களில் இப்பிரச்னைகள் தொடர்கிறது. கண்காணித்து நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.சுப்புராஜ், சமூக ஆர்வலர், ராஜபாளையம்....................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X