பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழா கோலாகலம்; கோயில்கள், வீடுகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு

Added : நவ 20, 2021
Share
Advertisement
விருதுநகர்-விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாப்பட்ட நிலையில்,கோயில்கள்,வீடுகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.மாவட்டத்தில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்ட நிலையில் கோயில்களில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டு ,தீபங்கள் ஏற்ற சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அனைத்து கோயில்களும் தீபவிளக்குகளால் பளிச்சிட்டன.

விருதுநகர்-விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழா கோலாகலமாக கொண்டாப்பட்ட நிலையில்,கோயில்கள்,வீடுகளில் தீபமேற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.மாவட்டத்தில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்ட நிலையில் கோயில்களில் சொக்கப்பனை கொழுத்தப்பட்டு ,தீபங்கள் ஏற்ற சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அனைத்து கோயில்களும் தீபவிளக்குகளால் பளிச்சிட்டன. வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.அனைத்து தெருக்களிலும் வீடுகள் முன்பு தீபம் ஓளிக்க மாவட்டத்தின் அனைத்து நகர்,கிராம பகுதிகள் தீப விளக்குகளால் ஜொலித்தன.விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர், ரயில்வே பீடர் ரோடு ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மீனாட்சி சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சொக்கபனை கொழுத்தப்பட்டது.சஞ்சீவி மலையில் மகாதீபம்ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்றுப் பகுதி முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை கொண்டாடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி அடிவாரப்பகுதி நீர்க்காத்த அய்யனார் கோயிலில் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.கொரோனா காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து போலீஸ் சோதனை சாவடி அமைத்து பக்தர்கள் திருப்பி அனுப்பபட்டனர். சஞ்சீவி மலை குமாரசாமி கோயிலில் வழக்கத்திற்கு மாறாக காலையில் இருந்து கோயில் நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் இன்றி மலையில் தீபம் ஏற்றும் வைபவம் நடந்தது. நகரின் பல்வேறு பகுதி பக்தர்கள் மலை மீது எரிந்த தீபத்தை வீடுகள் முன்பிருந்து வழிபட்டனர்.ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், சொக்கர் கோயில், குருசாமி கோயில், தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர், புத்துார் மலைக்கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்த நாதன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகளை, ரகு பட்டார் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பழனியாண்டவர் கோயில், பெரிய மாரியம்மன் கோயில், நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயில், மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை வழிபாடு சிறப்புடன் நடந்தது. சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X