பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாக்., பொறுப்பேற்க வேண்டும்: ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நியூயார்க் : 'பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை, அச்செயலுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்' என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர், பாக்., பெயரை குறிப்பிடாமல் பேசியதாவது:
India,Pakistan,UN,United Nations,இந்தியா,ஐநா,ஐக்கிய நாடுகள் அவை,பாகிஸ்தான்

நியூயார்க் : 'பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை, அச்செயலுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்' என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர், பாக்., பெயரை குறிப்பிடாமல் பேசியதாவது: பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுத்தால்தான் பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முழு வெற்றி கிடைக்கும்.


latest tamil news


சில நாடுகளில் பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதை தடுக்கும் சட்ட திட்டங்கள் போதிய அளவிற்கு இல்லை. அது தொடர்பான உதவிகளை உலக நாடுகள் வழங்க வேண்டும்.அதே நேரத்தில் சில நாடுகள் பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது குற்றம் என தெரிந்தே, அந்த தவறை செய்கின்றன. பயங்கரவாத அமைப்பினர் சுதந்திரமாக நடமாடவும், தாராளமாக நிதியுதவி பெறவும் உதவுகின்றன.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஐ.நா., தடை செய்த பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் மீது தெற்கு ஆசியாவைச் சேர்ந்த சில நாடுகள் நடவடிக்கை எடுக்காமலும், நிதியுதவி பெறுவதை தடுக்காமலும் உள்ளதாக, சர்வதேச செயலாக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, பயங்கரவாத நிதியுதவி தடுப்பு அமைப்பின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை அச்செயலுக்கு பொறுப்பேற்கச் செய்ய உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இதுவே, அதற்கான நேரம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-நவ-202117:18:07 IST Report Abuse
Lion Drsekar எங்கு யார் வலியுறுத்தி என்ன பயன் இங்கு இருப்பவர்களே அவர்களுக்காக வாழ்கிறார்கள் அவர்களுக்கு எல்லா பாதுகாப்பு, சம்பளம், வாழ்நாள் பென்சன் எல்லாமே நம் வரிப்பணத்தில் இருக்க வெளிநாட்டில் சென்று குரல் கொடுப்பதால் என்ன பயன், மொத்தத்தில் மக்களை மூடர்களாக்கிவிட்டார்கள், மிகுந்த மன வருத்தத்தில் இந்த பதிவை செய்கிறேன், வந்தே மாதரம்
Rate this:
Cancel
unmaimani - chennai,இந்தியா
20-நவ-202115:59:22 IST Report Abuse
unmaimani பாகிஸ்தானை விடுங்க பாஸ். நம்ம ஊருல குடி இருப்பு பகுதிகளில் தொழுகை வீடு கட்டி ஒலி பெருக்கி போட்டு மக்களை அவதிக்குள்ளாகி, அங்குள்ள மக்களை தானாக வெளியேற்றும் சதி வேலையை கொஞ்சம் கவனிங்க
Rate this:
Cancel
20-நவ-202115:42:28 IST Report Abuse
சம்பத் குமார் 1). இந்தியாவுக்கு பெரும் கவலை உள்ளது.2). என்னவெனில் இம்ரான் கான் இன்றோ நாளையோ என கோமா ஸ்டேஜில் உள்ளார். அடுத்த வாரம் புது பிரதமர் யார் என்று தெரியும்.3). நமக்கு இம்ரான்கான் ராகுல் காந்தியை போன்று இந்தியர்களுக்கு பிடித்தவர். ராகுல்காந்தி போன்று திறமையானவர். 4). இம்ரான்கான் இருந்தால்தான் பாகிஸ்தான் பல வகையில் புகழ் அடையும்.5). இம்ரான்கான் போய்விட்டால் பஞ்சாப் சித்து ராகுல்காந்தியிடம் கதை சொல்ல முடியுமா???6). என்னவோ போங்க. நவாஸ் ஷெரீப் ஒரளவு மோடியிடம் நட்புறவு கொண்டவர். இவருக்கு பிரதமர் ஆக சந்தர்ப்பம் கிடைக்குமா???7). இம்ரான்கான் இல்லையெனில் ஆப்கானிஸ்தான் என்னாவது ???? பஷ்தூன் வம்சத்தினர் எப்படி ஆப்கானிஸ்தானை ஆள முடியும்.8). பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நல்ல நிர்வாகம் இருந்தால்தான் அண்டை நாடுகள் நல்லா இருக்கும் ஏன் உலகமே நன்றாக இருக்கும்.நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X