பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் சாலை மறியல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : கொசஸ்தலை ஆறு, குப்பம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறி, ஆற்காடுகுப்பம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் ஊராட்சி கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த ஆறு, இங்குள்ள குப்பம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு
 ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் சாலை மறியல்

திருவாலங்காடு : கொசஸ்தலை ஆறு, குப்பம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறி, ஆற்காடுகுப்பம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடுகுப்பம் ஊராட்சி கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த ஆறு, இங்குள்ள குப்பம் ஏரியின் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், கால்வாயில் தண்ணீர் செல்லாமல், குப்பம் கிராம சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.இதற்கு நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பும், ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுமே காரணம் எனக்கூறி, ஆற்காடுகுப்பம் மக்கள், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ., சத்யா, தாசில்தார் ஜெயராணி மற்றும் காவல் துறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., சத்யா கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்தனர். மறியலால் 40 நிமிட போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X